சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி கொலையில் 9 பேர் கைது

Added : செப் 02, 2021
Share
Advertisement
மடிப்பாக்கம், செப். 2- -மூவரசம்பட்டில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை, மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு, சபாபதி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் ராமச்சந்திரன், 29; சரித்திர பதிவேடு குற்றவாளி.இவர் மீது, பல்லாவரத்தில் கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, மர்ம கும்பல்

மடிப்பாக்கம், செப். 2- -மூவரசம்பட்டில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை, மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு, சபாபதி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் ராமச்சந்திரன், 29; சரித்திர பதிவேடு குற்றவாளி.இவர் மீது, பல்லாவரத்தில் கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.மகனை காப்பாற்ற முயன்ற அவரின் தாய் சுந்தரி, காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பியோடியது. இது குறித்த புகாரின் படி, மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் விசாரித்தனர். இதில், நங்கநல்லுாரைச் சேர்ந்த வசந்தகுமார், 37, என்பவர், முன்விரோதம் காரணமாக, ராமச்சந்திரனை, கொலை செய்தது தெரிய வந்தது.இது தொடர்பாக, வசந்தகுமார், கீழ்கட்டளையைச் சேர்ந்த குமரன், நெல்லையை சேர்ந்த சுரேஷ்கண்ணா உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனம், ஒன்பது கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின், அவர்கள் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X