கல்லுாரி மாணவர் பேட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர் பேட்டி

Added : செப் 02, 2021
Share
* ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள ராக்கெட் ஏவுதளமான சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இருக்கம் தீவு. இங்கிருந்து படகில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த 30 மாணவர் - மாணவியர், சுண்ணாம்புக்குளம் மற்றும் ஆரம்பாக்கத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேற்று வந்தனர்.* திருத்தணி அரசு கல்லுாரிக்கு வந்த

* ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள ராக்கெட் ஏவுதளமான சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இருக்கம் தீவு. இங்கிருந்து படகில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த 30 மாணவர் - மாணவியர், சுண்ணாம்புக்குளம் மற்றும் ஆரம்பாக்கத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேற்று வந்தனர்.* திருத்தணி அரசு கல்லுாரிக்கு வந்த மாணவர் - மாணவியருக்கு, பேராசிரியர்கள் பாடம் நடத்தி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.* அதிகாலையில் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் சிலர், பள்ளி நுழைவாயில் மூடப்பட்டிருந்த போதிலும், உற்சாக மிகுதியில், சுவர் ஏறி குதித்து பள்ளிக்குள் சென்றனர். போதிய பஸ் வசதி இல்லாத போதிலும், கிராமப்புற மாணவர்கள், சில கீ.மீ., நடந்தே, தங்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.* பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நடவடிக்கை வேண்டும்என் மகன் மேல்நல்லாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறான். பள்ளி திறக்காததால் மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருந்தது. மாணவர்களை வைரஸ் பாதிக்காத வகையில், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ். சந்தானம், 45,பெற்றோர், கம்மவார்பாளையம்.மாணவர்களை உளவியல் ரீதியாக படிப்புக்கு தயார் செய்து, கற்றல் திறனை மேம்படுத்த உள்ளோம். 10ம் வகுப்பில் பொது தேர்வை சந்திக்காமல், பிளஸ் 1க்கு வந்துள்ளனர். அரசு வழிகாட்டலின் படி, 'பிரிட்ஜ்கோர்ஸ்' என்னும் முறையை ஒன்பது முதல் பிளஸ் 2 வரையில் உள்ள மாணவர்களுக்கு நடைமுறைபடுத்தி, முந்தைய வகுப்பின் பாடத்திட்டத்தை இந்தாண்டின் முதல் இரண்டு மாதம் செப்., 1 முதல் அக்டோபர் 31 வரை நடத்த உள்ளோம். இதன் வாயிலாக மேல்நிலை கல்வியின் அடிப்படையை மாணவர்கள் கற்று கொள்ள முடியும்.மா.மோகன்தாஸ்இயற்பியல் முதுகலை ஆசிரியர்அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாலங்காடுமாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்திவரும் நிலையில், தற்போது நேர்முக வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளோம். மாணவர்களை போல், ஆசிரியர்களும் மிகவும் ஆர்வத்துடன் பாடத்தை துவங்கியுள்ளோம்.புத்துணர்வு பாடங்களை நடத்துவதுடன், ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்தும் மதிப்பீடு நடத்தப்பட உள்ளது. வி.ஜி.விநாயகம்,பட்டதாரி ஆசிரியர், சொரக்காய்பேட்டை.கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் வகுப்பு, கல்வி சேனல் மூலம் பாடங்கள் கற்றோம். சில நேரங்கள் பாடங்கள் குறித்து புரியாத நிலை ஏற்படும். தற்போது பள்ளிகள் திறந்து ஆசிரியர்களை நேரிடையாக பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சந்தேகங்களை நேரில் கேட்டு அறிந்து கொள்கிறோம். வகுப்பறையில் வந்து தோழிகளை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது.எல்.நான்சி, பத்தாம் வகுப்பு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்கோட்டை.அரசு வழிகாட்டுதலின் படி பள்ளிகள் திறந்ததால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். ஆன்லைன் வகுப்புகளின் போது, கேள்வி, பதில் பெரிய அளவில் இருக்காது. நேரடி வகுப்புகள் துவங்கியதால் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் எளிதாக கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். கேள்வி, பதிலின் போது சக மாணவர்கள் கூறும் விடைகள், எளிதாக மாணவர்கள் மனதில் பதியும். மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும்.போ.செழியன்,வரலாறு முதுகலை ஆசிரியர்,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி.கல்லுாரி திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு கல்வி முக்கியம் வாய்ந்தது. நேரடி வகுப்புகள் மூலம் தெளிவான விளக்கங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும். கல்லுாரிக்கு மாணவ - மாணவியர் வருவதால் மாணவர்கள் புத்துணர்ச்சி அடைவர். ஆன்லைன் கற்றலை விட நேரடி வகுப்புகள் மூலம், மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து படிக்கலாம். பேராசிரியர்கள் வழங்கும் 'டிப்ஸ்' மாணவர்களின் மனதில் ஆழமாக பதியும்.டாக்டர்.எம்.ஜெய்லாப்தீன்,உதவி பேராசிரியர், பொருளியல் துறை,அரசு கலைக் கல்லுாரி, திருத்தணி

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X