இலவச வீட்டுமனை விவகாரம் பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை-இலவச வீட்டு மனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் தொடர்பாக, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தொடர்பான விவகாரத்தில், நேற்று மீண்டும் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் மேற்கு காலனியைச் சேர்ந்தோருக்கு, ராஜாநகரம் கிழக்கு கிராமத்தை ஒட்டி, இலவச வீட்டு மனைக்கு இடம் ஒதுக்கீடு

ஆர்.கே.பேட்டை-இலவச வீட்டு மனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் தொடர்பாக, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தொடர்பான விவகாரத்தில், நேற்று மீண்டும் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் மேற்கு காலனியைச் சேர்ந்தோருக்கு, ராஜாநகரம் கிழக்கு கிராமத்தை ஒட்டி, இலவச வீட்டு மனைக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு ராஜாநகரம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 25 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த விவகாரத்தில், அவ்வப்போது பிரச்னை எழுவதும், வருவாய் துறையினர் சமரசம் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில், ராஜாநகரம் மேற்கு காலனியை சேர்ந்தோர் நேற்று, சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக புறப்படுவதாக, வருவாய் றையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையிலான அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று அவர்களை சமரசம் செய்தனர். 15 நாட்களுக்குள், சுமூக தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர்.இதை ஏற்று கிராமத்தினர், தங்களின் திட்டத்தை கைவிட்டனர். இருதரப்பினரும் வெவ்வேறு சமூத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக, இந்த பகுதியில் நேற்று, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X