போலீஸ் டைரி| Dinamalar

போலீஸ் டைரி

Added : செப் 02, 2021
Share
விபத்தில் வாலிபர் உயிரிழப்புநகரி: சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த ஏர்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடரமணா மகன் பானு, 21. நேற்று முன்தினம் தன் இருசக்கர வாகனத்தில் திருப்பதி நோக்கி சென்றார். ரேணிகுண்டா - திருப்பதி வழியில், எர்ம்மாரெட்டி பாளையம் தொழிற்பேட்டை அருகே, எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ரேணிகுண்டா போலீசார்

விபத்தில் வாலிபர் உயிரிழப்புநகரி: சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த ஏர்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடரமணா மகன் பானு, 21. நேற்று முன்தினம் தன் இருசக்கர வாகனத்தில் திருப்பதி நோக்கி சென்றார். ரேணிகுண்டா - திருப்பதி வழியில், எர்ம்மாரெட்டி பாளையம் தொழிற்பேட்டை அருகே, எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.ரயிலில் இருந்து விழுந்தவர் பலிநகரி: சித்துார் மாவட்டம், புத்துார் டவுன் மராட்டி ரயில்வே கேட் - நந்திமங்கலம் அருகே, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், சென்னையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்ற விரைவு ரயிலில் இருந்து, நேற்று தவறி விழுந்தார். பலத்த காயமடைந்து அதே இடத்திலேயே இறந்தார். மஞ்சள் டீ சர்ட், வெள்ளை நிற பேன்ட் அணிந்திருந்தார். இறந்தவரின் பெயர், விலாசம் தெரியவில்லை. ரேணிகுண்டா ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.10 செம்மரக்கட்டைகள் பறிமுதல்நகரி: சித்துார் மாவட்டம் எர்ரவாரிபாளையம் - பிலேறு பிரதான சாலையில், வனத்துறையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தினர். காரில் வந்தவர்கள் சாலையோரம் நிறுத்தி தப்பியோடினர். காரில், 10 செம்மரக்கட்டைகள் இருந்ததை பார்த்து, அவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியோரை தேடுகின்றனர்.ரயில் மோதி முதியவர் உயிரிழப்புதிருவாலங்காடு: மணவூர் ரயில் நிலையம் அடுத்த, மருதவல்லிபுரம் கிராமம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சகாதேவன், 75.நேற்று காலை, உறவினர் வீட்டுக்கு செல்ல தொழுதாவூர் ரயில்வே பாதையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில், சகாதேவன் உயிரிழந்தார். சடலத்தை மீட்ட அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பட்டப்பகலில் கொள்ளைஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் குமார் மனைவி தேவி, 40. இவர், நேற்று காலை வேலைக்கு சென்றார். அவரது மகளும், பள்ளிக்கு சென்று விட்ட நிலையில், வீடு பூட்டப்பட்டிருந்தது.மாலையில் வீடு திரும்பியோர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே, பீரோவில் இருந்த 6 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேவி புகாரின்பேரில், ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X