பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு கோடி லிங்கம் தரிசனம் ஸ்ரீபெரும்புதுாரில் ஏற்பாடு

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்-ஸ்ரீபெரும்புதுாரில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் கோடி லிங்கம் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீபெரும்புதுாரில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் தியான ஆலயம் மற்றும் கலைக்கூடம் அமைந்துள்ளது. இங்கு ஆன்மீக அருங்காட்சியம், ஆன்மீக 'வீடியோ' அரங்கம் உள்ளது. மேலும், இலவச ராஜயோகம் கற்றுத்தரப்படுகிறது.உடல், மன ஆரோக்கியம் மற்றும் குடும்பம்

ஸ்ரீபெரும்புதுார்-ஸ்ரீபெரும்புதுாரில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் கோடி லிங்கம் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீபெரும்புதுாரில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் தியான ஆலயம் மற்றும் கலைக்கூடம் அமைந்துள்ளது. இங்கு ஆன்மீக அருங்காட்சியம், ஆன்மீக 'வீடியோ' அரங்கம் உள்ளது. மேலும், இலவச ராஜயோகம் கற்றுத்தரப்படுகிறது.உடல், மன ஆரோக்கியம் மற்றும் குடும்பம் ஒற்றுமையை வலியுறுத்தி, கோடி லிங்கம் தரிசனம், ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிங்கத்தை சுற்றி பிரதிபலிக்கும் கண்ணாடிகள் மூலம் கோடி லிங்கம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுாரில் அமைக்கப்பட்டுள்ள கோடி லிங்கம் தரிசனத்தை, கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், பொதுமக்கள் இலவசமாக கண்டு தரிசனம் செய்யலாம். ஆண்டு முழுதும் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளது என, பிரம்மா குமாரிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.முன்னதாக, இந்த கோடி லிங்கம் தரிசனத்தை பிரம்மா குமாரிகள் அமைப்பின் தமிழகம் மற்றும் கேரளா மாநில சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா, கடந்த 28ம் தேதி திறந்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X