மாமல்லபுரம் அரசு மரபு கல்லுாரி மேம்பாட்டுக்கு அறிவிப்பு வருமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரம் அரசு மரபு கல்லுாரி மேம்பாட்டுக்கு அறிவிப்பு வருமா?

Added : செப் 02, 2021
Share
மாமல்லபுரம்-மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்ப கல்லுாரி மேம்பாட்டுக்கு, சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக கலை, பண்பாட்டுத் துறை நிர்வகிக்கும் அரசு கட்டட, சிற்பக் கல்லுாரி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது. இது, தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இணைந்தது.பாரம்பரிய மரபு கட்டடக் கலை, கல், மரம்,

மாமல்லபுரம்-மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்ப கல்லுாரி மேம்பாட்டுக்கு, சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக கலை, பண்பாட்டுத் துறை நிர்வகிக்கும் அரசு கட்டட, சிற்பக் கல்லுாரி, மாமல்லபுரத்தில் இயங்குகிறது. இது, தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இணைந்தது.பாரம்பரிய மரபு கட்டடக் கலை, கல், மரம், சுதை, உலோக சிற்பக் கலைகள், வண்ண ஓவியக் கலை ஆகிய பாடப்பிரிவுகளில், நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றன. தற்போது, 200க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.கல்லுாரியில் முதல்வர், 14 விரிவுரையாளர்கள் மற்றும் உதவி விரிவுரையாளர்கள் உட்பட 32 ஆசிரிய பணியிடங்கள் இருக்கின்றன; நிர்வாக பிரிவில், 31 பணியிடங்கள் உண்டு.மரபுக்கலைகளுக்கான, ஆசியாவின் ஒரே கல்லுாரியான இங்கு, பல ஆண்டுகளாக முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர் பிரிவு, நிர்வாக பிரிவு பணியிடங்கள் காலியாக உள்ளன.கடந்த ஐந்து ஆண்டுகளாக, கட்டடவியல் விரிவுரையாளரே, பொறுப்பு முதல்வராக பணிபுரிகிறார். எட்டு விரிவுரையாளர்கள், இரு உதவி விரிவுரையாளர்கள், நிர்வாக பிரிவு ஊழியர்கள் ஒன்பது பேர் என, மொத்தம், 19 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.கலை பயிற்சியளிக்க, ஆசிரியர்கள் அவசியம். இப்பிரிவில் பணிபுரிந்தோர் ஓய்வு பெற்றும், காலி பணியிடங்கள் நியமிக்கப்படவில்லை. பணிபுரியும் சிலரும், விடுப்பில் சென்றால், கல்லுாரி செயல்பாடு முடங்குகிறது.இத்துறையின்கீழ் சென்னை, கும்பகோணம் பகுதிகளில், நுண்கலை கல்லுாரி; சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, கோவை பகுதிகளில், அரசு இசைக் கல்லுாரிகள் உள்ளிட்டவை இயங்குகின்றன. இவற்றிலும், பெரும்பாலான பணியிடங்கள் காலியாகவே உள்ளன.நிதியும் குறைவாக ஒதுக்கி, மேம்பாடு கேள்விக்குறியாக உள்ளதாக, சிற்பக் கலைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்துறையின், சட்டசபை மானிய கோரிக்கை செப்., 4ல் விவாதிக்கப்படவுள்ள நிலையில், இவற்றின் மேம்பாடு குறித்து அறிவிக்கப்படுமா என, கலைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X