பொது செய்தி

தமிழ்நாடு

தாழ்வாக தொங்கும் 'கேபிள்' மின் தடம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்-வாலாஜாபாத் ராஜ வீதியில் தாழ்வாக தொங்கும் 'கேபிள்' மின் வழித்தட கம்பியை இழுத்து கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வாலாஜாபாத் பேரூராட்சியில், 1 கி.மீ., துாரத்திற்கு கேபிள் மின் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் வழித்தடம், ஒரு மின் கம்பத்திற்கும், மற்றொரு மின் கம்பத்திற்கும் இடையே தாழ்வாக தொங்குகிறது. இது, வாகனங்கள் கடக்க முடியாமல், பல தரப்பு

வாலாஜாபாத்-வாலாஜாபாத் ராஜ வீதியில் தாழ்வாக தொங்கும் 'கேபிள்' மின் வழித்தட கம்பியை இழுத்து கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.வாலாஜாபாத் பேரூராட்சியில், 1 கி.மீ., துாரத்திற்கு கேபிள் மின் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் வழித்தடம், ஒரு மின் கம்பத்திற்கும், மற்றொரு மின் கம்பத்திற்கும் இடையே தாழ்வாக தொங்குகிறது. இது, வாகனங்கள் கடக்க முடியாமல், பல தரப்பு வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.வாலாஜாபாத் ராஜ வீதியில், அருணாசலேஸ்வரர் கோவில் அருகே, கேபிள் மின் வழித்தடத்தை மின் கம்பத்தில் இழுத்து கட்டவில்லை. இதனால் அவ்வழியாக லாரி உள்ளிட்ட லோடு வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள், தாழ்வாக தொங்கும் கேபிள் மின் வழித்தடத்தை இழுத்து கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெரும்பாலான மின் கம்பங்களில் கேபிள் வழித்தடத்தை இழுத்து கட்டி உள்ளோம். விடுபட்ட மின் கம்பத்தில் இழுத்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X