ஓட்டு எண்ணிக்கை இடம் செங்கை கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை இடம் செங்கை கலெக்டர் ஆய்வு

Added : செப் 02, 2021
Share
மாமல்லபுரம்-உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணவும், ஓட்டுப்பெட்டிகள் பாதுகாக்கவும், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், இட ஆய்வு செய்கிறார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. வார்டு வரையறை, ஓட்டுப் பெட்டிகள் தயார்நிலையில் வைப்பது உள்ளிட்ட பணிகளை, வட்டார வளர்ச்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு

மாமல்லபுரம்-உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணவும், ஓட்டுப்பெட்டிகள் பாதுகாக்கவும், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், இட ஆய்வு செய்கிறார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. வார்டு வரையறை, ஓட்டுப் பெட்டிகள் தயார்நிலையில் வைப்பது உள்ளிட்ட பணிகளை, வட்டார வளர்ச்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில்அனைத்து வட்டார பகுதிகளிலும், ஓட்டுப்பெட்டிகளை பாதுகாக்கவும், ஓட்டு எண்ணிக்கைக்கு ஏற்ற இட தேர்விற்காகவும்,அரசுப் பள்ளிகள், தனியார்கல்லுாரிகளில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் எஸ்.பி., விஜயகுமாருடன் ஆய்வு செய்கிறார். மாமல்லபுரம் தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று முன்தினம் அவர்கள் ஆய்வு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X