பொது செய்தி

தமிழ்நாடு

உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை

Added : செப் 02, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். பள்ளிகள், கல்லுாரிகள் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து, திருப்புலிவனம் கல்லுாரிக்கு வந்த மாணவ - மாணவியருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை
 உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர்.

அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். பள்ளிகள், கல்லுாரிகள் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து, திருப்புலிவனம் கல்லுாரிக்கு வந்த மாணவ - மாணவியருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது. ஒரு பெஞ்சிற்கு இரு மாணவர் மட்டுமே அமர வைக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் திங்கள், புதன், வெள்ளி கிழமையில் இரண்டாம் ஆண்டு மாணவ - மாணவியருக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமையில் மூன்றாம் ஆண்டு மாணவ - மாணவியருக்கும் கல்லுாரி நடைபெறுகிறது.தடுப்பூசி போடாத மாணவ - மாணவியருக்காக கல்லுாரியில் நாளை, சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

 உத்திரமேரூர் வட்டார அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காஞ்சி புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், நேற்று திடீர் ஆய்வு செய்தார். அதன்படி, திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை, சமையல் அறை, கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா என, ஆய்வு செய்தார். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், எல்.எண்டத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி நேற்று ஆய்வு செய்தார். ஊராட்சி சார்பில், பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி முறையாக தெளிக்கப்பட்டதாக என, தலைமை ஆசிரியர் மணிவண்ணனிடம் கேட்டறிந்தார்.பள்ளி விடுமுறையால் நீண்ட நாட்களாக வீட்டில் இருந்தேன். 'ஆன்லைன்' வகுப்பில் பாடம் நடத்தியது புரியவில்லை. பள்ளி திறப்பால் நண்பர்களை பார்த்து பேசுவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. வீட்டில் இருந்தால் நேரம், படிப்பு வீணாகிறது. பள்ளிக்கு வந்து ஒழுக்கத்தையும், படிப்பையும் கற்றுக் கொள்ள முடிகிறது.என்.ஹரிஷ்பிரபா, பிளஸ் 2 மாணவன்,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்போரூர்.'ஆன்லைன்' மூலமாக பாடம் நடத்தியும், மாணவியரை பார்த்துக் கொண்டோம். மாணவியருக்கு, நேரடியாக பாடம் நடத்துவது, சந்தோஷமாக உள்ளது. பாடங்களில் உள்ள சந்தேகங்களை, உடனுக்குடன் கேட்கும் வாய்ப்பு உள்ளது.கீதாகுமாரி, ஆசிரியை,அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.அரசு கலைக்கல்லுாரி திறக்கப்பட்டதால், பேராசிரியர்கள் பாடம் நடத்தியது புரியம்படியாக இருந்தது. 'ஆன் லைன்' வகுப்பில் பாடங்களை மட்டும், ஆசிரியர்கள் நடத்துவர். கல்லுாரிக்கு வந்ததால், ஆய்வகங்களில் ஆய்வு செய்ய முடியும்; நுாலகத்திற்கு சென்று படிக்க முடியும்.கோ.அருணாச்சலம்மாணவர், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை கல்லுாரி, செங்கல்பட்டு.கொரோனா காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பில் பாடம் நடத்தும்போது, குறிப்பிட்ட நேரத்திற்கு நடத்துவர். பள்ளிகளில், நேரடியாக பாடம் நடத்துவதால், அனைத்து பாடங்களையும் புரிந்து படிக்க முடியும். சக மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சியாக உள்ளது.இ.ஆனந்தகுமார்பள்ளி மாணவர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.செங்கல்பட்டு மாவட்டத்தில் 593 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 95 சதவீத ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மற்றவர்கள் தடுப்பூசி செலுத்த உள்ளனர். மாணவ - மாணவியர் அனைவருக்கும், தலா ஐந்து முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க 50 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.ராகுல்நாத், செங்கல்பட்டு கலெக்டர்என் மகள் பிளஸ் 2 படிக்கிறார்.

'ஆன்லைன்' வகுப்பு நடத்தினாலும், எங்கள் கிராமத்தில், 'நெட்வொர்க்' பிரச்னையால் ஆன்லைன் வகுப்பை முழுமையாக கவனிக்க முடியவில்லை. ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பிற்கு பள்ளி திறந்திருப்பது வரவேற்கத்தக்கது.இ.பெருமாள்பெற்றோர், கருவேப்பம்பூண்டி.குடும்ப சூழ்நிலையால் 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் வாங்க முடியாமல், சிரமமாக இருந்தது. இதனால், 'ஆன்லைன்' வகுப்பில் முறையாக பங்கேற்க முடியவில்லை. கல்லுாரி திறந்து வகுப்பு துவங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.ஜி.ஜனாபி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டுஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, உத்திரமேரூர்.கொரோனா ஊரடங்குக்குப்பின், நான்கு மாதங்களுக்குப்பின் பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்பில் பங்கேற்பதன் மூலம், ஆண்டு இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.எஸ்.பானுப்ரியா பிளஸ் 2 மாணவி அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புலிவனம்.மாணவர்களுக்கு பாடம் நடத்துவதைவிட, முதலில் அவர்களுக்கு தொற்றிலிந்து தொடர்ந்து தங்களை பாதுகாத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ளுதல் போன்றவற்றை முதலில் சொல்லிக் கொடுக்கிறோம். கடந்த கால இழப்பை மீண்டும் கொண்டு வருதல் குறித்து தன்னம்பிக்கையையும் ஆலோசனையும் வழங்கி வருகிறோம்.

எஸ்.அசோகன்,தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்போரூர் பள்ளி திறப்பதால் மாணவர்கள், பாடம் குறித்த சந்தேகங்களை, ஆசிரியரிடம் நேரடியாக கேட்டு கற்றுக் கொள்ள முடியும். அதே நேரத்தில் பாதுகாப்பும் முக்கியம். பள்ளி நிர்வாகம், மாணவர்களை பாதுகாப்பான முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.எஸ்.தேவி,பெற்றோர், திருப்போரூர்.
- நமது நிருபர்கள் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X