பொது செய்தி

இந்தியா

லடாக் யூனியன் பிரதேசத்தின் மாநில விலங்கு பனிச் சிறுத்தை

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லே: லடாக் யூனியன் பிரதேசத்தில், மாநில விலங்காக பனிச் சிறுத்தையையும், மாநில பறவையாக கறுப்பு கழுத்துடைய கொக்கையும் அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக, அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது.இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின்,
Snow leopard, state animal, Ladakh

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில், மாநில விலங்காக பனிச் சிறுத்தையையும், மாநில பறவையாக கறுப்பு கழுத்துடைய கொக்கையும் அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக, அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது.இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின், மாநில விலங்காக பனிச் சிறுத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநில பறவையாக, கறுப்பு கழுத்து உடைய கொக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையின் முதன்மை செயலர் பவன் கோட்வால் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:மாநில விலங்காக பனிச் சிறுத்தையையும், மாநில பறவையாக கறுப்பு கழுத்துடைய கொக்கையும் அறிவித்து லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவை இரண்டும், அரியவகை இனங்களாக கருதப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன், ஜம்மு - காஷ்மீருக்கு, மாநில விலங்காக ஹங்குல் மானும், மாநில பறவையாக, கறுப்பு கழுத்துடைய கொக்கும் இருந்தன. லடாக்கில் கறுப்பு கழுத்துடைய கொக்கு அதிகம் காணப்படுவதால், இனி, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மாநில பறவையாக, அது இருக்காது. இதேபோல், ஹங்குல் மான், காஷ்மீரில் அதிகம் இருப்பதால், லடாக்கின் மாநில விலங்காக அது இருக்காது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
02-செப்-202109:32:59 IST Report Abuse
Milirvan அப்புடியே கோவில், விஹாரம்'ன்னு எல்லாம் கட்டி திபெத்தியர்களுக்கும் ஒரு ஈர்ப்பை உண்டாக்கிடுங்க..பிரிவினை அப்தல்லாக்கள் வயிறெரிஞ்சி ஜெலுசில் சாப்பிடட்டும்.. இல்ல.. அப்புடியே போய் சேரட்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X