பொது செய்தி

தமிழ்நாடு

கனிம குவாரிக்கு அனுமதி பெறணும்

Added : செப் 02, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு--செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கனிம இருப்பு கிடங்கு மற்றும் கல் அரைக்கும் அரவை இயந்திரம் அமைத்து தொழில் புரிய, கலெக்டரிடம் பதிவு செய்ய வேண்டும்.ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட, கனிம இருப்பு அனுமதிதாரர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டை, கனிமம் எடுத்துச்செல்லும் வாகன

செங்கல்பட்டு--செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கனிம இருப்பு கிடங்கு மற்றும் கல் அரைக்கும் அரவை இயந்திரம் அமைத்து தொழில் புரிய, கலெக்டரிடம் பதிவு செய்ய வேண்டும்.ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட, கனிம இருப்பு அனுமதிதாரர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டை, கனிமம் எடுத்துச்செல்லும் வாகன ஓட்டுனரிடம் வழங்க வேண்டும்.வாகன ஓட்டுனர், அங்கீகரிக்கப்பட்ட கனிம முகவர்களிடம் இருந்து ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் இதர கனிமங்களை அனுமதி பெற்று, லாரியில் தார்பாய் கொண்டு மூடி செல்ல வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல், வாகனங்கள் செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X