பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி மையங்களுக்கு ஆர்வத்துடன் வந்த குழந்தைகள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில், குழந்தைகள் ஆர்வத்துடன் வந்தனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனுடன், அங்கன்வாடி மையங்களும், நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளன.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
 அங்கன்வாடி மையங்களுக்கு ஆர்வத்துடன் வந்த குழந்தைகள்

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் திறக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில், குழந்தைகள் ஆர்வத்துடன் வந்தனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனுடன், அங்கன்வாடி மையங்களும், நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளன.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில், இரண்டு முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளை, அவர்களது பெற்றோர் அழைத்து வந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 940 அங்கன்வாடி மையங்கள்; செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,266 மையங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். காலை 11:00 மணிக்கு வந்த குழந்தைகளுக்கு மதியம், 12:00 மணியளவில் முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மாவட்ட குழந்தை வளர்ச்சிதிட்ட அலுவலர் சர்குணா மற்றும் துறை ஊழியர்கள், அங்கன்வாடி மையங்களில் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X