பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய கபடி போட்டி: மணிமங்கலம் டீம் வெற்றி

Added : செப் 02, 2021
Share
Advertisement
படப்பை--பஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில், மணிமங்கலம் பிரண்ட்ஸ் கபடி அணியினர், முதல் பரிசை வென்றனர்.இளைஞர் விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டு இந்தியா என்ற அமைப்பு சார்பில், தேசிய அளவில் கபடி போட்டி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், கடந்த 28ம் தேதி நடந்தது. இதில், தமிழகம், பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்றன.இந்த போட்டியில்

படப்பை--பஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில், மணிமங்கலம் பிரண்ட்ஸ் கபடி அணியினர், முதல் பரிசை வென்றனர்.இளைஞர் விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டு இந்தியா என்ற அமைப்பு சார்பில், தேசிய அளவில் கபடி போட்டி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், கடந்த 28ம் தேதி நடந்தது. இதில், தமிழகம், பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்றன.இந்த போட்டியில் தமிழகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிமங்கலம் பிரெண்ட்ஸ் கபடி அணியினர், 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்றனர்.இதன் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில், 18 - 5 என்ற புள்ளிக்கணக்கில் மணிமங்கலம் அணியினர் இறுதி போட்டியை வென்றனர்.பயிற்சியாளர் மாடசாமி, சந்திரசேகர் வழிகாட்டுதலோடு சென்ற மணிமங்கலம் பிரெண்டஸ் அணியைச் சேர்ந்த மகேஷ், பிரேம், விஷால், ஸ்டீபன்ராஜ், குணசேகரன், உதயகுமார், காளிங்கன், கிஷோர், மோகன் ஆகிய கபடி வீரர்கள் விளையாடினர்.இவர்களுக்கு வென்றிக்கான சான்றிதழ், கோப்பை, பதக்கம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X