போலீஸ் டைரி.......

Added : செப் 02, 2021
Share
Advertisement
குடிபோதையில் ஆசாரி தற்கொலைகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் என்.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் பரந்தாமன், 36; தச்சு வேலை செய்பவர். வேலையில்லாத நிலையில் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது.இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு, மன வருத்தத்தில் இருந்த பரந்தாமன், நேற்று காலை வீட்டுக்கு அருகேயிருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை

குடிபோதையில் ஆசாரி தற்கொலைகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் என்.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் பரந்தாமன், 36; தச்சு வேலை செய்பவர். வேலையில்லாத நிலையில் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது.இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு, மன வருத்தத்தில் இருந்த பரந்தாமன், நேற்று காலை வீட்டுக்கு அருகேயிருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இறந்தவரின் மனைவி காயத்ரி புகாரின்பேரில், பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆலை சுவர் விழுந்து ஒருவர் பலிஸ்ரீபெரும்புதுார்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய் மோண்டால், 46. ஸ்ரீபெரும்புதுார் அருகே, கீவளூர் கிராமத்தில் தங்கி, இருங்காட்டுகோட்டை சிப்காட்டில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும், கீவளூர் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில், ஹைட்ராலிக் கருவிகளை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் 10 அடி உயர மதில்சுவர், மழையில் நனைந்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய விஜய் மோண்டால், உடல் நசுங்கி அதே இடத்திலேயே பலியானார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்தில் வாலிபர் மரணம்திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த, கருமாரபாக்கத்தைச் சேர்ந்த ரவியின் மகன் தினகரன், 25; பெயின்டர். நேற்று மாலை தாம்பரத்திலிருந்து, கருமாரபாக்கத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.திருக்கழுக்குன்றத்தில் புறவழிப்பாதை வடக்குப்பட்டு பகுதியில் 5:15 மணிக்கு கடந்தபோது, எதிரில் வந்த சிமென்ட் லாரி மோதி, அதே இடத்தில் இறந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார், அவரது உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.நன்னடத்தையில் 10 பேர் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் தாலுகா ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 10 பேர், திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பு கேட்டனர். அவர்களுக்கு ஓராண்டு நன்னடத்தையில் இருக்குமாறு, கோட்டாட்சியர் ராஜேஸ்வரி உத்தரவிட்டு, அவர்களை விடுவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X