சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 02, 2021
Share
Advertisement
வளர்ப்பு மீன்கள் இறப்புவாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் மனைவி வள்ளியம்மாள். இவருக்கு சொந்தமான, 60 சென்ட் நிலத்தில், மீன் குட்டை எடுத்து கட்லா, புல்கெண்டை உள்ளிட்ட பல வித மீன்களை வளர்த்து வருகிறார். நேற்று காலை மர்மமான முறையில், குட்டையில் மீன்கள் இறந்து கிடந்தன. வள்ளியம்மாள் கூறுகையில், ''மீன்களை குட்டையில்

வளர்ப்பு மீன்கள் இறப்புவாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் மனைவி வள்ளியம்மாள். இவருக்கு சொந்தமான, 60 சென்ட் நிலத்தில், மீன் குட்டை எடுத்து கட்லா, புல்கெண்டை உள்ளிட்ட பல வித மீன்களை வளர்த்து வருகிறார். நேற்று காலை மர்மமான முறையில், குட்டையில் மீன்கள் இறந்து கிடந்தன. வள்ளியம்மாள் கூறுகையில், ''மீன்களை குட்டையில் விட்டிருந்தேன். அவை நன்றாக வளர்ந்த நிலையில் திடீரென இறந்துள்ளன. இறந்த மீன்களை குட்டையில் இருந்து அகற்றி, மண்ணில் புதைத்துவிட்டேன். போலீசில் புகார் அளிக்க உள்ளேன்,'' என்றார்.மாற்றுத்திறனாளிகள் போராட்டம்உத்திரமேரூர்: மஹாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் உத்திரமேரூர் வட்டக்குழு சார்பில், உத்திரமேரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று, காத்திருக்கும் போராட்டம் நடந்தது.இதையடுத்து, 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு, தனி அடையாள அட்டை வழங்குவதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் உறுதியளித்தததை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.374 மாணவியருக்கு தடுப்பூசிகாஞ்சிபுரம்: கல்லுாரி மாணவ - மாணவியரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், கல்லுாரி மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், நேற்று நடந்தது. மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.கல்லுாரி முதல்வர் முனைவர் ஸ்ரீமதி ராமலிங்கம் முகாமை துவக்கி வைத்தார். 18 வயதிற்கு மேற்பட்ட, 374 மாணவியர், ஆர்த்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X