மடை திறந்து தாவும் நதியலையான மாணவர்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மடை திறந்து தாவும் நதியலையான மாணவர்கள்!

Added : செப் 02, 2021
Share
மீண்டும் உற்சாகம் தந்த வகுப்பறை வாசம்சந்தேகம் தீர்ப்பது வகுப்பறையேசக்திவேல், 12ம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: நீண்ட நாட்களுக்குப் பின் பள்ளிக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. வீட்டில் இருந்து படிக்கும்போது பெரும்பாலும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை கேட்க முடிவதில்லை. இதனால் படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. தற்போது பள்ளி


மீண்டும் உற்சாகம் தந்த வகுப்பறை வாசம்


சந்தேகம் தீர்ப்பது வகுப்பறையேசக்திவேல், 12ம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: நீண்ட நாட்களுக்குப் பின் பள்ளிக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. வீட்டில் இருந்து படிக்கும்போது பெரும்பாலும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை கேட்க முடிவதில்லை. இதனால் படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. தற்போது பள்ளி திறக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. எந்த சந்தேகங்களையும் தீர்ப்பது வகுப்பறை மட்டுமே. நீண்ட நேரம் இணையத்தில் இருந்து படிப்பது கடினமாக இருந்தது. தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பாவது சக நண்பர்களை பார்ப்பதுடன், அவர்களோடு அமர்ந்து பேசி மகிழ்ந்து, படிப்பது கூடுதல் சந்தோசமாக உள்ளது.


பள்ளிக்கு வந்ததில் மகிழ்ச்சி


எம்.அபிராமி, 12ம் வகுப்பு, திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி: கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளிக்கு வந்ததில் மகிழ்ச்சி. வீட்டிலேயே முடங்கியதால் எப்போது பள்ளி திறக்குமோ என்று ஆவலாக காத்திருந்தேன். நேற்று பள்ளிக்கு வந்து தோழிகளை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. கொரோனா பரவலை தடுக்க செய்திருந்த ஏற்பாடுகள் தொற்று பயத்தை போக்கியது. உடல் வெப்பநிலையை பரிசோதித்தனர். வகுப்பறையில் மேஜைகளை இடைவெளி விட்டு அமைத்திருந்தனர். இதுவரை 'ஆன்லைன்' மூலம் கற்றோம். அரசு தேர்வுக்கு தயாராவதால் சந்தேகங்களை நேரடியாக ஆசிரியர்களிடம் கேட்டு தீர்வு காணலாம் என்பதால் மகிழ்ச்சி.
வகுப்பறை கல்வியே சிறப்பு

எஸ்.சத்தியப்பிரியா, 11ம் வகுப்பு என்.எஸ்.வி.வி., மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பட்டிவீரன்பட்டி: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்கு வருவது மகிழ்ச்சிதான். ஆசிரியர்களை தோழிகளை சந்திப்பது அதைவிட மகிழ்ச்சி. ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. பள்ளியில் ஆசிரியர் நடத்துவதில் உள்ள புரிதல் ஆன்லைன் வகுப்புகளில் கிடைக்கவில்லை. வகுப்பில் நேரடியாக ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். வீடுகளில் உறவினர்களுடன் இருந்தாலும், கல்வியை வகுப்பறை சூழலில் சகதோழியருடன் படிப்பதே சிறப்பு. சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி எடுத்துக் பங்கேற்பதால் பாதுகாப்பாக உணர்கிறோம்.உணவை பகிர முடியவில்லை


-கே.எம்.மீதுன்ஸ்ரீ, 11ம் வகுப்பு, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, ஆயக்குடி: வெகுநாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆன்லைன் வகுப்பில் இணையவழியில் பார்த்த நண்பர்களை, நேரில் சந்தித்தது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. பள்ளியில் சமூக விலகலை கடைபிடித்து, கைகளை கழுவி விட்டு உள்ளே வர அனுமதித்தனர். வகுப்பறைச் சூழல் எங்கள் மனதை சமூக புரிதலை ஏற்படுத்துவதி பண்படுத்தும். நேரில் சந்தித்த நண்பர்களுடன் உணவை பகிர்ந்து உண்ண நினைத்தோம். ஆனால் பகிர்ந்து கொள்ளக் கூடாது அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா காலத்தில் நடந்து கொள்வதைப் பற்றி விரிவாக கூறினர். இந்த நிலையும் விரைவில் மாற வேண்டும்.முழுமையாக கற்கவில்லை


எஸ்.ராஜேஷ்குமார், 10ம் வகுப்பு மாணவர், கலைமகள் மேல்நிலைப்பள்ளி, வடமதுரை: கடந்த கல்வியாண்டு இறுதியில் சிலமாதங்களே வகுப்பறைக்கு செல்ல முடிந்தது. நடப்பு கல்வியாண்டில் 'ஆன்லைன்' வகுப்பில் படித்தோம். இதில் அலைபேசி சிக்னல் துண்டிக்கும் போது நாங்களும் வெளியேறி விடுவோம். சிக்னல் கிடைத்தால் மீண்டும் இணைவோம். இதனால் கற்றலில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. ஆசிரியர் காட்டும் படங்களையும் தெளிவாக பார்க்க முடியாது. வகுப்பறை போல் எங்கள் கையை உயர்த்தி சந்தேகம் கேட்க முடியாத நிலை இருந்தது. இனி சகமாணவர்களுடன் இணைந்து படிக்கலாம் என்பது மகிழ்ச்சியே.ஆன்லைன் கல்வி சரியில்லை


ஷாலினி, பத்தாம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, கொடைக்கானல்: கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக பள்ளிக்கு வராமல் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி பயின்றது திருப்தியில்லை. ஆசிரியர்கள், சக மாணவர்களை பார்த்தது மிகுந்த மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மூலம் பள்ளியில் கற்பிக்கும் முறையே சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து படிக்க ஏதுவாக உள்ளது. இனி எஞ்சியுள்ள பள்ளி வகுப்புகளையும் திறக்கும் பட்சத்தில் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். பள்ளியில் அரசு வழிகாட்டுதலின்படி விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. பெருந்தொற்று நேரத்தில் மாணவர்கள் அனைவரும் கவனமுடன் இருந்து கற்க வேண்டும்.மகிழ்ச்சியாக உள்ளது


கே.யுவராஜ், 9ம் வகுப்பு, கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்: நீண்ட நாள் கழித்து பள்ளிக்கூடம் வருவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கல்வி தொலை க்காட்சியில் நடத்திய பாடங்களை தவறாமல் பார்த்தேன். பள்ளியில் கொரோனா தடுப்பு விதிமுறைகள், உளவியல் கருத்துக்களை ஆசிரியர்கள் கற்பித்தனர். பல மாதங்கள் தனியாக பாடங்களை கவனித்த நான், தற்போது நண்பர்களுடன் வகுப்பறையில் ஆசிரியர்கள் சொல்லித் தருவதை நேரடியாக கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக கற்கும் போது சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இணையம் வழியாக கற்கும்போது சிக்னல் கிடைக்காத சமயங்களில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.புதிய உணர்வு தருகிறது


எஸ்.பூமா, 9ம் வகுப்பு, மீனாட்சி மேல்நிலைப்பள்ளி, ரெட்டியார்சத்திரம்: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடக்கிறது. மாணவர்களுடன் இணைந்த கற்றல் சூழலில், மனரீதியான புத்துணர்வை உணர முடிகிறது. இதுவரை ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தோம். அதைவிட சந்தேகங்களுக்கான விளக்கத்தை ஆசிரியர்களிடம் நேரடியாக பெறுவது வகுப்பறை கல்வியின் சிறப்பம்சம். கற்றலை விட கேட்டலே நன்று என்பது முன்னோர் வாக்கு. பிற நண்பர்களுக்கு கிடைக்கும் விளக்கங்கள், பாடத்தை புரிந்து கொள்வதில் கூடுதல் தகவல்களை பெற உதவியாக உள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X