நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை முகநூலில் பதிவேற்றியவர்களை போலீசார் கைது செய்தனர்.
மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் இருதயராஜ் மகள் ஸ்டெல்லா மேரி 20. தனியார் கல்லூரியில் படித்தபோது ரெண்டலப்பறை சுப்பிரமணியம் மகன் சதீஷ் 23, என்பவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் தங்களது ஆபாச படங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தற்போது சதீஷுடன் ஸ்டெல்லா மேரி தொடர்பில் இல்லை எனவும் தெரிகிறது.பின்னர் மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட தொடர்பால், தூத்துக்குடியைச் சேர்ந்த அருண் 23, என்பவருடன் ஸ்டெல்லா மேரி பழகி வந்துள்ளார்.
இதனையறிந்த சதீஷ் ஆத்திரமடைந்து ஸ்டெல்லா மேரியின் ஆபாசப்படங்களை அருணுக்கு பகிர்ந்துள்ளார். இதனை அருண் தன் நண்பர்களான விஸ்வா, நெல்சனுக்கு அனுப்ப, அவர்கள் முகநூலில் படங்களை பதிவேற்றம் செய்தனர். ஸ்டெல்லாமேரி நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சதீஷ், நெல்சன் ஆகியோரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE