பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரிகள் திறப்பால் மாணவர்கள் உற்சாகம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு பின் திண்டுக்கல்லில் பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.கொரோனா 2வது அலை பாதிப்பு காரணமாக கடந்த மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று குறைந்து வருவதால் நேற்று (செப்.1) முதல் 9 - 12 ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கும், முதலாம் ஆண்டை தவிர மற்ற கல்லுாரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள்

திண்டுக்கல் : கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு பின் திண்டுக்கல்லில் பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

கொரோனா 2வது அலை பாதிப்பு காரணமாக கடந்த மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று குறைந்து வருவதால் நேற்று (செப்.1) முதல் 9 - 12 ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கும், முதலாம் ஆண்டை தவிர மற்ற கல்லுாரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கியது.நேற்று காலை முதலே பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர். நுழைவு வாயிலில் மாணவர்கள் உடல் வெப்பநிலையை பரிசோதித்து, சானிடைசர் வழங்கப்பட்டது.

பூங்கொத்து, சாக்லெட் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.ஒரு வகுப்பில் 20 மாணவர்களே அனுமதிக்கப்பட்டனர். நேற்று பாடம் எதுவும் நடத்தவில்லை. திண்டுக்கல் அரசு மகளிர் மற்றும் பழநி ரோடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இணை இயக்குனர் ஜெயக்குமார், முதன்மை கல்வி அலுவலர் கருப்பையா, நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் பார்வையிட்டனர்.

பள்ளிச் சீருடை, அடையாள அட்டையுடன் மாணவர்கள் அரசு பஸ்களில் இலவச பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.எம்.வி.எம்., அரசு மகளிர் கலை கல்லுாரி, சில தனியார் கல்லுாரிகளை தவிர மற்ற கல்லுாரிகளுக்கு 2ம், 3ம் ஆண்டு மாணவர்கள் வந்தனர். மாணவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தினார்களா என 'சர்வே'எடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X