நத்தம் : தி.மு.க., வின் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறி, அதைக் கண்டித்து மாவட்டத்தில் பல இடங்களில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக பேட்டியிட்ட ரவி மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர். நத்தத்தில் ஜெ., பேரவை மாநில இணைச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், மணிகண்டன், நகர செயலாளர் சிவலிங்கம் பங்கேற்றனர். 'ஜெயலலிதா பல்கலையை சிதம்பரம் அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, அரசியல் காழ்ப்புணர்ச்சியை கண்டிப்பதாக', கோஷம் எழுப்பினர்.
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் கன்னிவாடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். ஜெ.,பேரவை செயலாளர் மயில்வாகனன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் மகேந்திரன், பிரதிநிதி பாண்டி முன்னிலை வகித்தனர். தர்மத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்து, கூட்டுறவு சங்க தலைவர்கள் தண்டபாணி, முருகன் பங்கேற்றனர்.
ரெட்டியார்சத்திரத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் தலைமையில் இணை செயலாளர் வன்னியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மாணவரணி செயலாளர் வர்க்கீஸ், ஜெ.பேரவை செயலாளர் முருகன் கலந்துகொண்டனர்.ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் சின்னாளபட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் விஜயபாலமுருகன், நகர செயலாளர் சக்கரபாணி, துணைச் செயலாளர் தங்கம் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE