பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி குழந்தைகளுக்கு 'வெஜ் புலாவ்' வழங்கல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், திண்டுக்கல்லில் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன.கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் நேற்று (செப்.1) முதல் அங்கன்வாடி மையங்களை திறக்க அறிவுறுத்தி, வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. இதன்படி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 35 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன.இரண்டு தவணை தடுப்பூசி

திண்டுக்கல் : கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், திண்டுக்கல்லில் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன.

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் நேற்று (செப்.1) முதல் அங்கன்வாடி மையங்களை திறக்க அறிவுறுத்தி, வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. இதன்படி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 35 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர். ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காலை 11:30 முதல் மதியம் 12:30 வரை மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தனர்.

திண்டுக்கல் பாலதிருப்பதி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு 'வெஜ் புலாவ்' வழங்கப்பட்டது. குழந்தைகள் அடம் பிடித்தபடி மையங்களுக்கு வந்தனர். அவர்களை சமாதானம் செய்து சாப்பிட வைத்து பெற்றோர் அழைத்து சென்றனர்.திட்ட அலுவலர் பூங்கொடி கூறுகையில்,''ஞாயிறு தவிர மற்ற நாட்களில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து வர, விரல்களில் நகப்பூச்சு செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X