பொது செய்தி

தமிழ்நாடு

முதல் நாளிலேயே 10 ஆயிரம் தேங்காய் ஏலம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முதன் முதலாக நடந்த தேங்காய் ஏலத்தில் 10 ஆயிரத்து 300 தேங்காய் ஏலம் விடப்பட்டது.இந்த விற்பனை கூடத்தில் வாரம்தோறும் புதன்கிழமை இங்கு விவசாயிகள் தேங்காயை விற்பனை செய்யலாம். மட்டை உள்ள தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ. 12 க்கும், மட்டை உரித்த தேங்காய் கிலோ ரூ.28 க்கும், மூன்றாம் தர தேங்காய்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முதன் முதலாக நடந்த தேங்காய் ஏலத்தில் 10 ஆயிரத்து 300 தேங்காய் ஏலம் விடப்பட்டது.

இந்த விற்பனை கூடத்தில் வாரம்தோறும் புதன்கிழமை இங்கு விவசாயிகள் தேங்காயை விற்பனை செய்யலாம். மட்டை உள்ள தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ. 12 க்கும், மட்டை உரித்த தேங்காய் கிலோ ரூ.28 க்கும், மூன்றாம் தர தேங்காய் பருப்பு கிலோ ரூ. 95 க்கும் ஏலம் விடப்பட்டது.குத்திலிப்பை, நாகணம்பட்டி, வடமதுரை அய்யலூர், அரசப்பிள்ளைபட்டி, கன்னிவாடி, காசிபாளையம் பகுதிகளில் இருந்து விற்பனை செய்ய விவசாயிகளும், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்ய வியாபாரிகளும் வந்திருந்தனர்.

கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் தலைமை வகித்தார். இளநிலை உதவியாளர் இந்துமதி, வண்டி ஆய்வாளர் அசோக்குமார், நந்தினி, நாட்ராயன் கலந்து கொண்டனர். கண்காணிப்பாளர் கூறுகையில்,"இங்கு தேங்காய் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு 3 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக் கணக்கில் விற்பனைத் தொகை செலுத்தப்பட்டுவிடும்" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X