ஊட்டச்சத்து மாத கண்காட்சி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து மாத கண்காட்சி துவக்கம்

Added : செப் 02, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத துவக்க விழா, கண்காட்சி நடந்தது.ஆண்டுதோறும் செப்டம்பரில் ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு 'ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்' எனும் தலைப்பில் துவக்க விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் விசாகன் கண்காட்சியை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத துவக்க விழா, கண்காட்சி நடந்தது.

ஆண்டுதோறும் செப்டம்பரில் ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு 'ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்' எனும் தலைப்பில் துவக்க விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் விசாகன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

அவர் பேசியது: மத்திய அரசு ஆரோக்கியம், தனிநபர் ஊட்டச்சத்து, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்த அனைத்து வட்டாரம் சார்பிலும் கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது, என்றார். மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி, ஆத்துார் அலுவலர் காலின் செல்வராணி, மேற்பார்வையாளர் சாந்தி, போஷன் அபியான் ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா உடனிருந்தனர். கண்காட்சியில் ஊட்டச்சத்து பிரமிடு, சிறுதானியம் மற்றும் இணை உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X