பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி அருகே மதுக்கடை அகற்ற வலியுறுத்தல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : அணைப்பட்டி பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.அணைப்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் குண்டலப்பட்டி, விநாயகபுரம், சிறுநாயக்கன்பட்டி, குல்லிசெட்டிபட்டி, சிவஞானபுரம், மேட்டுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 400 மாணவர்கள் படிக்கின்றனர். கொரோனாவால் பள்ளிகள் பல மாதங்களாக திறக்கவில்லை. நேற்று முதல் பள்ளி இயங்க

நிலக்கோட்டை : அணைப்பட்டி பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

அணைப்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் குண்டலப்பட்டி, விநாயகபுரம், சிறுநாயக்கன்பட்டி, குல்லிசெட்டிபட்டி, சிவஞானபுரம், மேட்டுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 400 மாணவர்கள் படிக்கின்றனர். கொரோனாவால் பள்ளிகள் பல மாதங்களாக திறக்கவில்லை. நேற்று முதல் பள்ளி இயங்க துவங்கியுள்ளது. பள்ளி செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால் மது அருந்தியவர்கள் மாணவிகளை கேலி செய்கின்றனர். மேலும் கழிப்பறைக்குள் மது அருந்திய பாட்டில்களை வீசுவதால் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் பள்ளி நிர்வாகம் கடையை அகற்ற வலியுறுத்தினாலும் நடவடிக்கை இல்லை. டாஸ்மாக், முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X