வாரத்தில் 4 நாள் வேலை; 3 நாள் லீவு: அக்., 1 முதல் புதிய விதிகள் அமல்

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி : 'வார வேலை நாட்களை நான்காகக் குறைத்து, பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, ஊதியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய தொழிலாளர் விதிகள், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தும் நான்கு புதியவிதிகள், கடந்த 2019 -20ம் ஆண்டுகளில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டன.தொழில் துறை உறவுகள்,
4 day_working day, 3 day_leave, New Rules

புதுடில்லி : 'வார வேலை நாட்களை நான்காகக் குறைத்து, பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, ஊதியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய தொழிலாளர் விதிகள், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தும் நான்கு புதியவிதிகள், கடந்த 2019 -20ம் ஆண்டுகளில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டன.தொழில் துறை உறவுகள், ஊதியம், சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்பு, பணி நிலவரம் ஆகியவற்றில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேர பணி என்பது, 12 மணி நேரமாக உயர்த்தப்படும். தினமும், 12 மணி நேரம் பணி செய்பவர்கள், வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும்; மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

வாரத்தில் 4 நாள் வேலை 3 நாள் லீவ் எப்போது அமல் ?

புதிய விதிகளின் கீழ், அடிப்படை ஊதியம் 50 சதவீதமாகவும், படிகள் 50 சதவீதமாகவும் கணக்கிடப்படும். அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் தான், பி.எப்., எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதிக்கான தொகை கணக்கிடப்படுகிறது.அடிப்படை ஊதியம் 50 சதவீதமாக கணக்கிடப்பட்டால், நிறுவனங்கள் செலுத்தும் பி.எப்., தொகை உயரும். இதனால், தொழிலாளர்களுக்கு பிடித்தம் போக கையில் கிடைக்கும் ஊதியம் குறையும். அதே நேரத்தில் பி.எப்., இருப்பு கணிசமாக உயரும்.


latest tamil newsஇந்த புதிய விதிகளை, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. பல்வேறு காரணங்களால் அது தள்ளிப் போனது. இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொழில் துறை உறவுகளுக்கான புதிய விதிகளின்படி, 300 ஊழியர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள், செலவீனங்களை குறைப்பது, ஆட் குறைப்பு, நிறுவனத்தை மூடுவது போன்ற நடவடிக்கைகளுக்கு, அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - சமயநல்லூர்,இந்தியா
06-செப்-202121:44:38 IST Report Abuse
ரத்தினம் தினம் 8 மணி நேரம் என்கிற அடிப்படையில், சராசரியாக வாரத்திற்கு 5 நாட்கள் என்று, 8 x 5 = 40 மணிநேரம் என்பது தொழிற்புரட்சி காலங்களில் இருந்து பெறப்பட்ட ஒரு சரிவிகித வேலை முறை. ஐ.டி.துறை வந்தபிறகு அது வெகுசுலபமாக 9 மணிநேரமாக, எந்த சட்ட மாறுதலுமில்லாமல், ஊதிய அமைப்பில் எந்த மாற்றமில்லாமல் மீறப்பட்டது. இன்று அதுவே அங்கு குறைந்தபட்ச அளவாகக் கருதப்படுகிறது. அதை இன்னும் எல்லா தொழிற்ச்சாலைகள், வணிக நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் நீட்டி ஒரு நாளைக்கே 12 மணிநேரம் உழைப்பு என்பதும், வாரத்தில் 3 நாட்கள் லீவு என்பதும், மூன்று வேளை முழு சாப்பாட்டை ஒரே வேளையில் தின்னுவது போல பிரச்சனையிலேயே முடியும். முதலில் அஜீரணம், பின்னர் பெரிய மருத்துவப் பிரச்சனைகள் என்று மட்டுமே கடைசியில் மிஞ்சும். 'இது கட்டாயமல்ல. விருப்பப்பட்டவர்கள்() பழைய முறையையே தொடரலாம் ' என்று கூறித்தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், இந்த 'விருப்பப்பட்டவர்கள்' என்பது நிர்வாகமேயொழிய, தொழிலாளர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ளுதல் நலம். மேலும், ஒரு தொழிற்சாலை அல்லது ஒரு நிறுவனம் இதை அமல்படுத்தி லாபத்தை அதிகப்படுத்தினால், அந்தத் துறையில் உள்ள எல்லா தனியார் நிறுவனங்களும் இதை கேள்வியே கேட்காமல் அடுத்த நாளே அமல்படுத்தும் என்பது சிறுகுழந்தைக்கும்கூடத் தெரியும். இம்மாதிரியான நேரசுரண்டலைத் தடுக்கவே தொழிலாளர் நலச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தொழிலாளர் நலச்சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கவலையாக இருக்குமானால், அதை எந்தெந்த இடங்களில் அவ்வாறு நடக்கிறதோ அந்தந்த இடங்களில் சரிசெய்வதுதான் அரசாங்கத்தின் கடமையாக இருக்கவேண்டியுமொழிய, ஒட்டுமொத்தமாக உழைப்பவர் நலனைக் குலைக்கும் எந்தச் செயலையும் செய்வது குறுகிய காலத்தில் வேண்டுமானால், பலன்தருவதுபோலத் தெரிந்தாலும், நீண்டகால நோக்கில் எதிர்மறை விளைவுகளையே தரும். இதை சரிசெய்யாவிட்டால், அதற்குமுன், தேர்தல் அரசியலில் இதற்கு எதிர்மறை விளைவுகள் வரும்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
03-செப்-202116:06:34 IST Report Abuse
J.Isaac தனியார் நிறுவனங்களில் இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லை. இந்தியாவில் எந்த நிறுவன முதலாளிக்கும் வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க மனது வராது. இதன் பின்னனயில் ஏதோ சூழ்ச்சி இருக்கும். தனியாருக்கு சாதகமாக தான் இந்த சட்டம் இருக்கும்
Rate this:
Hari - chennai,இந்தியா
05-செப்-202116:55:39 IST Report Abuse
Hariஉங்களுக்கு இத்தனை பெரிய அறிவை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லிக்கோங்கோ இஸ்க்...
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
07-செப்-202110:07:16 IST Report Abuse
RAVIKUMARஇவங்க கொண்டு வருவதெல்லாம் ஆரம்பத்துல இனிக்கிறாமாதிரி vaarthai ஜாலங்களோட வருது ...அப்புறம்தான் adhula இருக்குற உள்குத்து தெரியுது ....gas maaniyam ippo ungalukku evlo வருது hari sir ?.....
Rate this:
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
02-செப்-202121:47:59 IST Report Abuse
sampath, k It is totally wrong. 8 hrs. Work 8 hrs. Sleep and 8 hrs. Personal work. Of which, in cities, 2 to 3 hrs. are sping for travelling to office and return.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X