ஹிந்து தொகுதிகளில் கவனம்; தேர்தலுக்கு பா.ஜ., வியூகம்

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹிந்துக்கள் அதிகளவில் உள்ள 45 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நிர்வாகிகளுக்கு, பா.ஜ., தலைமை அறிவுறுத்தியுள்ளது.பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதுவரை, அகாலி தளத்துடன் கூட்டணி
BJP,Bharatiya Janata Party, HIndu

புதுடில்லி: பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹிந்துக்கள் அதிகளவில் உள்ள 45 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நிர்வாகிகளுக்கு, பா.ஜ., தலைமை அறிவுறுத்தியுள்ளது.

பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதுவரை, அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து பா.ஜ., போட்டியிட்டு வந்தது. முதல் முறையாக தனித்து களமிறங்க உள்ளது.


latest tamil news



மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் பா.ஜ., தனித்து போட்டியிட உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து, போட்டியிட்ட 45 தொகுதிகளில் 23ல் பா.ஜ., வென்றது. இதற்கிடையே மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என, பா.ஜ., கருதுகின்றது.

இந்நிலையில், ஹிந்துக்கள் அதிகம் உள்ள 45 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு தீவிர களப்பணியாற்றும்படி, மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒத்த கருத்துள்ள அமைப்புகளின் ஆதரவைப் பெறும்படியும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202118:25:08 IST Report Abuse
ஆரூர் ரங் 47 விழுக்காடு ஹிந்துக்கள் இருந்த போதும் ஒரு ஹிந்துவையும் அங்கு🤔 முதல்வராக விடவில்லை. அவர்களுக்கு அங்கு சிறுபான்மை சலுகைகளும் கிடையாது. மற்ற மாநிலங்களில் இந்நிலை இருந்தால காங்கிரசு திமுக போன்ற கம்பெனிகள் சும்மா விடுமா?
Rate this:
Cancel
02-செப்-202117:11:47 IST Report Abuse
அப்புசாமி யாராலோ பறிக்கப்பட்டு எவராலோ தொடுக்கப்பட்டு இன்னொருவரால் வாங்கபட்டு பல கை மாறிய பூவை தண்ணீர் தெளித்து புனிதமாக்கி , சில சமயம் நேராகவே கடவுளுக்கு சாத்தறதுக்கு மட்டும் ஆச்சாரியார்கள் வேண்டுமாம்.அங்கேதான் காசு புரளுது. அதுக்குத்தான் போட்டி எல்லாம்.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
02-செப்-202117:05:51 IST Report Abuse
தஞ்சை மன்னர் கேவலமான ஒரு கட்சியாக பி சே பி உருவாகுவது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது அல்ல என்பது தெளிவாக தெரிகிறது நம் நாட்டை மீண்டும் ஒரு பிரிவினை ஏற்படுத்திவிட்டுத்தான் விடுவார்கள் போல இந்த தேசவிரோத கட்சி முன்பு இப்படித்தான் ஆர் எஸ் எஸ் என்ற தேசவிரோத அமைப்பு செய்திட்டு போனது 1946 தற்போது மீணடும் நடத்திக்காட்ட இந்த அரசியல் கட்சி முயற்சிக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X