பொது செய்தி

இந்தியா

'பத்ம' விருதுக்கு தகுதியானோர் மக்கள் பரிந்துரைக்க கோரிக்கை

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: 'நாட்டின் மிக உயரிய 'பத்ம' விருதுகள் பெறும் தகுதி உடையோர் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும்' என, பொதுமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக, அமைச்சகத்தின் நேற்றைய அறிக்கை:பல்வேறு துறைகளில் சேவை மற்றும் சாதனை புரிந்தோருக்கு, மத்திய அரசின் சார்பில் ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.பத்ம விபூஷண், பத்ம பூஷண்
Padma Awards, Recommend, Home Ministry, பத்ம விருதுகள், பரிந்துரை, உள்துறை அமைச்சகம்

புதுடில்லி: 'நாட்டின் மிக உயரிய 'பத்ம' விருதுகள் பெறும் தகுதி உடையோர் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும்' என, பொதுமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அமைச்சகத்தின் நேற்றைய அறிக்கை:பல்வேறு துறைகளில் சேவை மற்றும் சாதனை புரிந்தோருக்கு, மத்திய அரசின் சார்பில் ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுவோர் குறித்த விபரங்கள், அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும்.


latest tamil news



இவ்விருதுக்கு தகுதியுடையோர் குறித்த பரிந்துரைகளை, பொதுமக்கள் நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின், https://padmaawards.gov.in/ என்ற வலைதளத்தில் பரிந்துரைக்கலாம். பெண்கள், தலித், பழங்குடியினர் என, எவ்வித பாகுபாடும் இன்றி, சேவை புரிந்தோர் மற்றும் சிறப்பான, விதிவிலக்கான சாதனை புரிந்தோர் குறித்த தகவல்களை அனைவரும் பரிந்துரைக்கலாம். இந்த பரிந்துரைகளை வரும் 15ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202122:56:34 IST Report Abuse
Vittal anand rao. இதோ லிஸ்ட்.1. ராசாத்தி அம்மாள்2.தயாளு அம்மாள்3. செந்தாமரை4அரவிந்தன்அப்படி போவது லிஸ்டு
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
02-செப்-202114:05:52 IST Report Abuse
vpurushothaman நல்ல யோசனை. அரசியல் சார்பற்று உண்மையாக சமுதாய சேவையாளர்களை மக்கள் பரிந்துரைக்க அருமையான வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளலாம்.
Rate this:
Cancel
02-செப்-202110:28:14 IST Report Abuse
ருத்ரா இந்தியாவில் பலதரப்பட்ட வர் இருந்த போதிலும் திருத்தலங்களில் இருக்கும் இடத்தில் மது மாமிசத்தை தடைசெய்த, துணிச்சலாக முடிவெடுத்த திரு யோகி ஆதித்ய நாத் அவர்கள். விருதுக்கு பெருமை சேர்ப்பவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X