தமிழக அரசு கேட்டதை மட்டுமல்ல, கேட்காததையும் மத்திய அரசு வழங்கி வருகிறது..| Dinamalar

தமிழக அரசு கேட்டதை மட்டுமல்ல, கேட்காததையும் மத்திய அரசு வழங்கி வருகிறது..

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (11)
Share
தமிழகத்திற்கு போதுமான உரம் அனுப்பப்படாததால், சாகுபடி காலத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, கள்ளச் சந்தையில் அதிக விலையில் விற்பனைக்கு வழிவகுக்கும். எனவே, தமிழக அரசின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.- மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்'தமிழக அரசு கேட்டதை மட்டுமல்ல, கேட்காததையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
தமிழக அரசு கேட்டதை மட்டுமல்ல, கேட்காததையும் மத்திய அரசு வழங்கி வருகிறது..

தமிழகத்திற்கு போதுமான உரம் அனுப்பப்படாததால், சாகுபடி காலத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, கள்ளச் சந்தையில் அதிக விலையில் விற்பனைக்கு வழிவகுக்கும். எனவே, தமிழக அரசின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்


'தமிழக அரசு கேட்டதை மட்டுமல்ல, கேட்காததையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. மாநிலத்தை ஆளும் கட்சியை, மத்திய அரசு பார்க்கவில்லை; மாநில மக்களை பார்க்கிறது...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சியில் வழங்கப்பட்டதை விட, மோடி அரசில் ஏராளமான முஸ்லிம்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது. பிறகு ஏன் மோடியை முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்கின்றனர்?
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி


'அதற்கான காரணம் உங்களுக்கே தெரியவில்லையா; ஆச்சர்யமாக இருக்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை.பொதுத்துறை சொத்துகளை ஊழலால் கொள்ளையடித்தது காங்கிரஸ். 'தோழர்' என்ற பெயரில் சுரண்டியது கம்யூனிஸ்டுகள். இந்தியாவின் வளர்ச்சியை தடுத்த இரு கட்சிகளுமே தேச விரோத, தொழிலாளர் விரோத கட்சிகளே.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


latest tamil news
'ஓ... அதனால் தான், பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் தள்ளாடுகின்றனவா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.கொரோனா தொற்றை முன்னிட்டு, விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமல்ல, அனைத்து மத ஊர்வலங்களுக்கும், தமிழக அரசு தடை விதித்துள்ளது. பா.ஜ., தலைவர்களின் பாலியல் குற்றங்களை மறைக்க, தமிழக பா.ஜ., விநாயகர் சதுர்த்தியை கேடயமாக பயன்படுத்துகிறது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது.
- தமிழக காங்., - எம்.பி., ஜோதிமணி


'காங்கிரசில் உங்களைப் போன்ற சிந்தனாவாதிகள் இருப்பதால் தான், அந்த கட்சி இன்னும் 'உயிர்ப்புடன்' இருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை.கொடியன்குளம் சம்பவம் நடந்தது அ.தி.மு.க., ஆட்சியில். அதனால், ஜெயலலிதா தன் வாழ்நாளில் கண்டிராத எதிர்ப்பை சந்தித்தார். நடந்ததை உணர்ந்து, பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்திக்க அவர் வந்தும், ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த எதிர்ப்பை, 20 ஆண்டுகளாக தி.மு.க., அறுவடை செய்தது.
- புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி


'சமீபத்தில் வந்த, 'கர்ணன்' படம் போல, அந்த கலவரம் தொடர்பாக, புதுப்புது தகவல்கள் வருகின்றனவே...' என, சொல்லத் துாண்டும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X