பொது செய்தி

இந்தியா

மோதிக்கொள்ளும் மீனவர்கள்: பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்கள்?

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
தமிழகம், புதுச்சேரியில் மீனவர்கள் மோதிக் கொள்ளும் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்கள் சதி இருப்பதாக, மீனவர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.தமிழகத்தில் 1,076 கி.மீ.,நீளமுள்ள கடற்கரையோரம் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடை முதல் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வரையிலான 14 கடலோர மாவட்டங்களில் 695 மீனவ கிராமங்கள் உள்ளன. 6,500 விசைப்படகுகள் மற்றும் 55 ஆயிரம் நாட்டுப்படகுகளில்
மீனவர்கள், மோதல்,பின்னணி, பன்னாட்டு நிறுவனங்கள்,

தமிழகம், புதுச்சேரியில் மீனவர்கள் மோதிக் கொள்ளும் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்கள் சதி இருப்பதாக, மீனவர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

தமிழகத்தில் 1,076 கி.மீ.,நீளமுள்ள கடற்கரையோரம் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடை முதல் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வரையிலான 14 கடலோர மாவட்டங்களில் 695 மீனவ கிராமங்கள் உள்ளன. 6,500 விசைப்படகுகள் மற்றும் 55 ஆயிரம் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் கடல் மீன் உற்பத்தியில் தமிழகம் 4 வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஆண்டு தோறும் 7 லட்சம் மெட்ரிக் டன் கடல் உணவு உற்பத்தியாகிறது. லட்சக்கணக்கான மீனவர்கள் பராம்பரிய முறைப்படி அமைதியாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சில ஆண்டுகளாக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகள், படகுகளில் அதிவேக இயந்திரங்கள் பொருத்துதல், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி சில மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர்.

இதனால் தொழில் ரீதியான போட்டி ஏற்பட்டு மீனவர்களிடையே மோதல் சம்பவங்கள் தலை துாக்கி சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் தொடர்கிறது. கடலுார் மாவட்ட மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் 2018 செப்.,4ல் ஹரிகிருஷ்ணன் என்பவர் சென்னை, உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.


latest tamil newsஅதில், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983ன் படி விதிகளை மீறி, கடல் வளத்தை பாதிக்கும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சில மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2000 மார்ச் 25ல் அளித்த தீர்ப்பில் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டது.

இருப்பினும், புதுச்சேரி, கடலுார், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள், கேரளாவிற்கு ஏற்றுமதி மற்றும் மீன் எண்ணெய் தயாரிப்புக்காக அதிகளவில் பயன்படுத்தப்படும் மத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். இதற்காக 50 ல் இருந்து 60 மீனவர்கள் பங்களிப்பில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு மற்றும் சுருக்குமடி வலைகளை தயார்படுத்தினர்.

சுருக்குமடி வலைகளால் சிறுதொழில் பாதிக்கப்படுவதாக ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நாகை, மயிலாடுதுறை,கடலுார் மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் மீனவர்களிடையே சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டன.நாகையில், 2020, ஜூலை,17ல், டி.ஆர்.ஓ.,மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் 47 கிராம மீனவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், இரட்டை மடி வலைகள், சுருக்குமடி வலைகள் பயன்படுத்தக் கூடாது. படகுகளில் அதிநவீன இயந்திரங்களை அப்புறப்படுத்திக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இரட்டை மடி வலைகள், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது. படகுகளில் பொருத்தப்பட்ட அதிவேக இயந்திரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மீனவ கிராமங்களில் கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் 700 க்கும் மேற்பட்ட படகுகளில் பொருத்தப்பட்ட அதிவேக இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

இரட்டை மடி மீன்பிடிப்பு முறையும் நிறுத்தப்பட்டது. பெரும்பாலான மீனவர்கள் சுருக்குமடி வலைகளை கலைத்து விட்ட நிலையில், சில மீனவர்கள் மட்டும் சுருக்குமடி வலைகளுக்கு அனுமதி கேட்டு போராடி வருகின்றனர்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இதுபோன்ற பிரச்னைகள் இல்லாத நிலையில் சில மாவட்டங்களில் ஒருசில கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமே அதிக முதலீட்டில் படகு மற்றும் வலைகளை உருவாக்கி விட்டு, வெளியில் வர இயலாமல் உள்ள நிலையில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.


நாகை நம்பியார் நகர் மீனவர், தீபராஜ்,40, கூறியதாவது:


latest tamil newsமீனவர்கள் 60 பேர் பங்களிப்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு படகு மற்றும் சுருக்குமடி வலை உருவாகிறது. ஜூன் 15 ம் தேதி முதல் செப்.,15 ம் தேதி வரையில் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க முடியும். கடல் நீரோட்டத்திற்கேற்ப கடல் மேல் மட்டத்தில் கூட்டமாக வரும் மத்தி மீன்களை மட்டுமே சுருக்குவலையை பயன்படுத்தி மீன் பிடிக்க முடியும். இந்த மீன்களை பிடிக்காமல் விட்டால் வேறு பகுதிக்கு மீன்கள் சென்று தானாகவே இறந்து விடும்.

விசைப்படகு உரிமையாளர்களிடம் கூலித் தொழிலாளர்களாக இருந்த மீனவர்கள், தற்போது ஒவ்வொருவரும் முதலாளி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், விசைப்படகு தொழிலுக்கு ஆட்கள் கிடைக்காத விரக்தியில் உள்ள விசைப்படகு உரிமையாளர்கள், மத்தி மீன்பிடிப்பால் கடல் வளம் பாதிக்கும் என கட்டுக்கதை அவிழ்த்து விட்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


சுருக்குமடி வலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள் கூறியதாவது:மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே கூட்டமாக வரும். முன்பெல்லாம் மத்தி மீன்கள் இடைவலை என்ற வலையில் பிடிக்கப்பட்டன. அதில் மேலோட்டமாக வரும் மீன்கள் மட்டுமே சிக்கும். மற்ற மீன்கள் வேறு பகுதிக்குச் சென்று விடும். ஆனால் சுருக்குமடி வலை என்பது ஒரு கி.மீ., துாரம் சுற்றளவில் வரும் மீன்களை வளைத்து ஒரு மீன்கூட தப்பமுடியாமல் பிடிக்கும் முறை. டன் கணக்கில் மீன்கள் சிக்குவதால் சில மீனவர்கள் இந்த முறையை பின்பற்றுகின்றனர்.

மீன்குஞ்சு வரை வலையில் சிக்குவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதோடு, சிறு மீன்பிடித் தொழில் அழிந்து விடும் அபாயம் உள்ளதால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தேசிய மீனவர் பேரவை துணை தலைவர் குமரவேலு கூறியதாவது:latest tamil news


அழிவுப்பூர்வமான வலைகள் மற்றும் இயந்திரங்களை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என 1983 சட்டம் கூறுகிறது. 2020 தமிழக அரசு தெளிவாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. கடலையும், கடல்வளங்களையும் நம்பித்தான் மீனவ சமுதாயம் உள்ள நிலையில், நமது வீட்டை பாதுகாப்பது போல் மீனவர்கள் கடலை பாதுகாக்க வேண்டும்.

அரசின் சட்டத்தை மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும். சுருக்குமடி வலை பிரச்னையில் அரசு தெளிவான முடிவெடுக்க வேண்டும். சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்களையும், எதிர்க்கும் மீனவர்களையும் மோதவிட்டு, மத்திய அரசு கடலை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப் போகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மீனவர்களுக்கு மாற்றுத்தொழில் தெரியாத நிலையில், அதிக முதலீட்டில் உருவாக்கிய சுருக்குமடி வலை மற்றும் படகுக்கு மாற்றாக மீனவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-செப்-202107:23:50 IST Report Abuse
அப்புசாமி எனக்கென்னவோ அமெரிக்க சி.ஐ.ஏ, ரஷ்ய கே.ஜி.பி, ஜெர்மனி கெஸ்டாபோ, தவிர இண்ட்டர்போல் போன்ற வெளிநாட்டு அமைப்புகளின் கூட்டு சதி இருக்கும்னு தோணுது.
Rate this:
Cancel
02-செப்-202117:01:13 IST Report Abuse
அப்புசாமி 10 பேர் மீன் பிடிச்சிட்டிருந்த இடத்தில் இன்னிக்கி ஆயிரம் பேர் மீன் பிடிக்கிறாங்க. ஆனா, அதே அளவு கடல்தான். அதே அளவு மீன்கள்தான் இருக்கு. நம்மா ஆளுங்க இலங்கை தாண்டி மீன் பிடிப்பதும் , இன்னும் இரான் வரை சென்று அங்கே மாட்டுவதும் கடல் வளங்களை ஏகத்துக்கு சுரண்டுகிறோம் என்பது தெளிவு. சீக்கிரம் கடல் உயிரினங்கள் குறைந்து போகும். மக்கள் தொகை பாதியா குறைஞ்சாதான் விடிவு காலம். கொரொனா மாதிரி பேரழிவுகள் அடிக்கடி வந்தா தேவலைன்னு தோணுது.ஆச்சு, அடுத்து வினாயகர் சிலைகளை கடலில் கரைத்து மீன்கள் இங்கேருந்து ஓடியே போயிரும்.அதை வெச்சு ஓட்டு வேட்டையாடஒரு கட்சி தயாராகி வருகிறது.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-செப்-202116:48:03 IST Report Abuse
Sriram V Kumaravelu don't politicise.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X