சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேசன் அரிசி மூட்டை பதுக்கல்: விற்பனையாளர் சஸ்பெண்ட்

Added : செப் 02, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுாரில் மக்களுக்கு வழங்க வேண்டிய, ரேசன் அரிசி மூட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்த ரேசன் கடை பெண் விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.வேலுார் முத்து மண்டபத்தில் கூட்டுறவு சங்கம் சார்பில், பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. கடையின் விற்பனையாளராக கலையரசி, 34, என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கார்டுதார்களுக்கு அரிசியை சரியாக வழங்கவில்லை என கடந்த மாதம் 26ம் தேதி

வேலுார்: வேலுாரில் மக்களுக்கு வழங்க வேண்டிய, ரேசன் அரிசி மூட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்த ரேசன் கடை பெண் விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வேலுார் முத்து மண்டபத்தில் கூட்டுறவு சங்கம் சார்பில், பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. கடையின் விற்பனையாளராக கலையரசி, 34, என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கார்டுதார்களுக்கு அரிசியை சரியாக வழங்கவில்லை என கடந்த மாதம் 26ம் தேதி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர்கள் நடத்திய விசாரணையில், மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசியை அங்குள்ள அரி, 60, என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. வேலுார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி 8 மூட்டைகளில் இருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரியை கைது செய்தனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலம், சித்துாருக்கு கலையரசி கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வேலுார் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திருகுண அய்யப்பதுரை இன்று கலையரசியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X