சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

Added : செப் 02, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். தலைமறைவான நால்வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வனச்சரகர் கந்தசாமி தலைமையில் அம்மூர் காப்புக்காட்டில் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள செம்மரங்களை வெட்டி கடத்த
செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். தலைமறைவான நால்வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வனச்சரகர் கந்தசாமி தலைமையில் அம்மூர் காப்புக்காட்டில் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற ஆறு பேரை விரட்டினர். அதில் நான்கு பேர் தப்பினர். இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டகிரி பாளையத்தை சேர்ந்த செல்வம், 26, அரசஷார் பிரபு, 27, என்பதும், சென்னைக்கு செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றதும் தெரியவந்தது. வனத்துறையினர் அவர்களை கைது செய்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.3 டன் எடையுள்ள 43 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய பூபதி, நந்தகுமார், பாலாஜி, ராஜி ஆகியோரை பிடிக்க வேலுார் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X