கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் அமரும் இடம்; சபாநாயகருக்கே அதிகாரம் என ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: ‛‛சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களை எங்கு, எப்படி அமரவைப்பது என்பது சபாநாயகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது,'' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கோவையைச் சேர்ந்த, வழக்கறிஞர் லோகநாதன் தாக்கல் செய்த மனு: தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள் ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, சின்னப்பா, பூமிநாதன், வேல்முருகன். அப்துல்சமது, சதன் திருமலைக்குமார், ரகுராமன்
சட்டசபை, ஐகோர்ட், உயர்நீதிமன்றம்,

சென்னை: ‛‛சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களை எங்கு, எப்படி அமரவைப்பது என்பது சபாநாயகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது,'' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவையைச் சேர்ந்த, வழக்கறிஞர் லோகநாதன் தாக்கல் செய்த மனு: தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள் ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, சின்னப்பா, பூமிநாதன், வேல்முருகன். அப்துல்சமது, சதன் திருமலைக்குமார், ரகுராமன் மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற ஜெகன் மூர்த்தி ஆகியோரை, சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எனக்கருதி, இருக்கைகள் ஒதுக்கி உள்ளனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள், எப்படி எதிர்க்கட்சிகளின் பணிகளை செய்ய முடியும்? ஆளும் கட்சிக்கும், இவர்கள் சார்ந்த கட்சிக்கும் இடையே பிரச்னை எழுந்தால், கொறடாவின் உத்தரவை பின்பற்றுவரா? அல்லது அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர் உத்தரவுக்கு கட்டுப்படுவரா?

சட்டசபை அனைத்துக் கட்சிகளின் தலைவர் கூட்டத்தில், இவர்களும் பங்கேற்கின்றனர். இது, ஒரு மோசமான முன்னுதாரணம். எனவே, சட்டசபையில் இவர்களுக்கு என தனியாக நேரமோ, இருக்கை ஒதுக்கவோ கூடாது என, உத்தரவிட வேண்டும். சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத இந்த கட்சிகளை, சட்டசபை அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது என, உத்தரவிடவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், எம்.எல்.ஏ.,க்களை எங்கு?, எப்படி அமர வைப்பது, கட்சி பிரதிநிதித்துவம் கொடுப்பது போன்ற முடிவுகள் முழுக்க, முழுக்க சபாநாயகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த மனுவில் எந்த பொது நலனும் இல்லை. எனவே, தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202120:43:12 IST Report Abuse
பேசும் தமிழன் என்னப்பா எவ்வளவு பெரிய விஷயத்துக்கு மனு தாக்கல் செய்து உள்ளார்... ஆனால் இதில் பொது காரணம் இல்லை என்று சதாரணமாக சொல்லி விட்டீர்கள்.... இது போன்ற செயல்கள் கண்டிப்பாக தடை செய்ய பட வேண்டும்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இப்படியொரு கட்சி, தேர்தல் கூட்டணி, சட்டசபை உறுப்பினர் பதவி "எல்லோர்க்கும் நல்லனாய்" நிலை தேவையா என்று சிந்தித்து ஒன்றிணைந்துவிட வேண்டும்
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
02-செப்-202115:45:12 IST Report Abuse
Hari விரும்பிய தீர்ப்பு கிடைத்துள்ளது மக்கள் மகிழ்ந்தனர்,உள்ளம் இனித்தது நாக்கு ருசித்தது, கண்கள் உயர்ந்தன கனவு கலைந்த தமிழா நீயே உனக்கு ஆப்பு சொருகிக்கிட்டீயே( அந்யற்றே சொன்னார் கட்டபொம்மன் எட்டப்பா நீ செய்துகொண்டது இருக்கும் இந்த மக்கள் விரோத செயலுக்கு உன்குலம் தலைக்காது அழியும்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X