பொது செய்தி

இந்தியா

கொட்டித் தீர்க்கும் கனமழை: வெள்ளக் காடானது டில்லி

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.ஆசாத் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. ஐடிஓ, ஐ.பி. மேம்பாலம் அருகே உள்ள ரிங் ரோடு, தௌலகுவான், ரோத்தக் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள்

புதுடில்லி: தலைநகர் டில்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.



latest tamil news



ஆசாத் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. ஐடிஓ, ஐ.பி. மேம்பாலம் அருகே உள்ள ரிங் ரோடு, தௌலகுவான், ரோத்தக் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.


latest tamil news



இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: ஆக.,31, காலை 8:30 முதல் செப்.,1 வரை, டில்லியின் சப்தர்ஜங்கில் 112.1 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. லோடி சாலையில் 120.2 மிமீ, ரிட்ஜ் 81.6 மிமீ மழை பதிவாகியது. இதற்கு முன், கடந்த 2002, செப்., 13ல் டில்லியில் 126.8 மி.மீ., மழை பதிவானது. அதற்கு முன், 1963, செப்., 16ல் 172.6 மி.மீ., மழை பதிவானது. குறைந்தபட்சம் 19 ஆண்டுகளில் ஒரே நாளில் செப்டம்பர் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை பதிவு இதுவாகும். இன்று (செப்., 2) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை மாலைக்குள் நிற்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202116:46:09 IST Report Abuse
அப்புசாமி அவதார புருஷர் ஆட்சியில் மழை பிச்சிக்கிட்டு கொட்டுது. மக்கள் பாதிப்படைவதால் இதற்கு கேசரிவாள் தான் காரணம்.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
02-செப்-202114:11:27 IST Report Abuse
SENTHIL NATHAN கேஜ்ரிவாலு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X