பொது செய்தி

தமிழ்நாடு

பெண் மாவோயிஸ்டுக்கு மருத்துவ பரிசோதனை

Added : செப் 02, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் மாவோயிஸ்டுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷன் மீது மாவோயிஸ்ட்கள் கடந்த 2002ம் ஆண்டு தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ரீனா ஜாய்ஸ் மேரியை காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசார் 2016ம் ஆண்டு கைது செய்து வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.தைராடு

வேலுார்: வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் மாவோயிஸ்டுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷன் மீது மாவோயிஸ்ட்கள் கடந்த 2002ம் ஆண்டு தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ரீனா ஜாய்ஸ் மேரியை காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசார் 2016ம் ஆண்டு கைது செய்து வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
தைராடு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த சிறைத்துறை டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதனால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் சிறையில் இருந்து அவரை வேலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தைராடு உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்தனர்.அன்று இரவு அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இன்று அவரது மருத்துவ அறிக்கையை சிறைத்துறையினர் மருத்துவமனையில் இருந்து வாங்கிச் சென்றனர். அதன் அடிப்படையில் சிறை மருத்துவமனையில் அவருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X