பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி திட்டமிட்டபடி நடக்கும்: இந்து முன்னணி

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
திருப்பூர்: ''விநாயகர் சதுர்த்தி விழா திட்டமிட்டபடி நடக்கும்,'' என்று, திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தற்போதுள்ள கொரோனா பரவலை தடுக்கும் வயைில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும்
VINAYAGAR, SATHUTHI, FUNCTION, HINDU MUNNANI, விநாயகர் சதுர்த்தி, நடக்கும், இந்து முன்னணி

திருப்பூர்: ''விநாயகர் சதுர்த்தி விழா திட்டமிட்டபடி நடக்கும்,'' என்று, திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தற்போதுள்ள கொரோனா பரவலை தடுக்கும் வயைில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபாடு நடத்தி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் காமராஜர் ரோட்டில் உள்ள குலாலர் விநாயகர் கோவில் முன் நடந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பங்கேற்றார். இதில், இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பெண்கள், அரசைக் கண்டித்து மண்ணை வாரி துாற்றி சாபமிட்டனர். தொடர்ந்து மறியல் போராட்டம் நடந்தது.


latest tamil news



அதன்பின் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா பட்டிதொட்டியெல்லாம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை தடை செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதை, இந்து மக்கள் ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள். தமிழக அரசுக்கு நல்ல புத்தி புகட்ட வேண்டும் என்று கோவில்களில் வழிபாடு நடத்தி இருக்கிறோம்.

வரும், 10ம் தேதி திட்டமிட்டபடி, 1.25 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த உள்ளோம். கடந்த முறை, 5 லட்சம் வீடுகளில் விநாயகர் வைத்தனர். இதை விட, அதிகமாக வைத்து வழிபட திட்டமிட்டுள்ளோம். உடனடியாக, இந்து முன்னணியை அழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-செப்-202100:06:19 IST Report Abuse
Pugazh V தமிழக மக்களின் விநாயகர் சதுர்த்தி விழாவில் தெருமுனை களில் விநாயகர் சிலை வைக்கும் வழக்கமே கிடையாது.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-செப்-202123:19:15 IST Report Abuse
தமிழவேல் தமிழ்நாடு கைவினை காகித கூழ் விநாயகர் சிலைகள், களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் இவங்கள எல்லாம் பாதிக்கும்னு சொல்லுவானுவோ... வேல் யாத்திரைக்கு காலண்டர் அட்டையை வெட்டி தூக்கிட்டு ஓடுவானுவோ...பொங்கலுக்கு, அரிசி எதுவும் இல்லாம, பஞ்சு வச்சி பொங்குவானுவோ. கொரோனா வந்து சாவுறதுக்கு எதுக்கு எல்லாரையும் கூட்டிகிட்டு போகணும் ?
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
02-செப்-202122:05:29 IST Report Abuse
sankar கணக்கில் அடங்காத சாபங்களை வாங்கி குவிக்கிறது இந்த அரசு
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-செப்-202115:52:10 IST Report Abuse
தமிழவேல் சாபமா....அப்புடீன்னா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X