விநாயகர் சதுர்த்தி திட்டமிட்டபடி நடக்கும்: இந்து முன்னணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி திட்டமிட்டபடி நடக்கும்: இந்து முன்னணி

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (74)
Share
திருப்பூர்: ''விநாயகர் சதுர்த்தி விழா திட்டமிட்டபடி நடக்கும்,'' என்று, திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தற்போதுள்ள கொரோனா பரவலை தடுக்கும் வயைில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும்
VINAYAGAR, SATHUTHI, FUNCTION, HINDU MUNNANI, விநாயகர் சதுர்த்தி, நடக்கும், இந்து முன்னணி

திருப்பூர்: ''விநாயகர் சதுர்த்தி விழா திட்டமிட்டபடி நடக்கும்,'' என்று, திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தற்போதுள்ள கொரோனா பரவலை தடுக்கும் வயைில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபாடு நடத்தி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் காமராஜர் ரோட்டில் உள்ள குலாலர் விநாயகர் கோவில் முன் நடந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பங்கேற்றார். இதில், இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பெண்கள், அரசைக் கண்டித்து மண்ணை வாரி துாற்றி சாபமிட்டனர். தொடர்ந்து மறியல் போராட்டம் நடந்தது.


latest tamil news



அதன்பின் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா பட்டிதொட்டியெல்லாம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை தடை செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதை, இந்து மக்கள் ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள். தமிழக அரசுக்கு நல்ல புத்தி புகட்ட வேண்டும் என்று கோவில்களில் வழிபாடு நடத்தி இருக்கிறோம்.

வரும், 10ம் தேதி திட்டமிட்டபடி, 1.25 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த உள்ளோம். கடந்த முறை, 5 லட்சம் வீடுகளில் விநாயகர் வைத்தனர். இதை விட, அதிகமாக வைத்து வழிபட திட்டமிட்டுள்ளோம். உடனடியாக, இந்து முன்னணியை அழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X