'இடா' புயல்: நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வெலிங்டன்: அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயலால் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் மற்றும் சூறாவளியால் தீவிரமான

வெலிங்டன்: அமெரிக்கா வட கிழக்கு மாகாணங்களில் 'இடா' புயலால் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டு நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsதெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் மற்றும் சூறாவளியால் தீவிரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாகாணத்தின் வடக்கு பகுதிகள் கடுமையாகப் பாதிப்படைந்து உள்ளன.
நியூயார்க் நகரின் ஆளுகையின் கீழ் வரும் புரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில், அவசர நிலை பிரகடனத்தை நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் அறிவித்துள்ளார்.

Flooding downpours have turned streets into raging rivers in North Plainfield, New Jersey Wednesday evening! #NJwx #Ida #FlashFloodWarning #SevereWeatherlatest tamil news


இதையடுத்து, நெவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎப்கே ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரத்தின் அவசர அறிவிப்பு அமைப்பு டுவிட்டர் பக்கத்தில், 'மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். பலத்த காற்றால் சிதைந்த பொருள்கள் பறந்துவந்த மக்களை தாக்க வாய்ப்புள்ளது. முடிந்த அளவுக்கு கீழ் தளங்களில் இருங்கள். ஜன்னல் அருகே நிற்க வேண்டாம்' என பதிவிடப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KayD -  ( Posted via: Dinamalar Android App )
02-செப்-202114:09:08 IST Report Abuse
KayD அது இடா இல்லை ஐடா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X