பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலை புலிகள் காப்பகம்: சுற்றுலாவுக்கு அனுமதி

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021
Share
Advertisement
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 6 மாதங்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்ஸ்லிப் உள்ளிட்ட வனச்சரக பகுதிகள் உள்ளன. இவற்றில், தங்கும் விடுதிகள், கவியருவி, நீர் வீழ்ச்சிகள், சின்னக்கல்லார் உள்பட பல சுற்றுலா பகுதிகள்
ஆனைமலை புலிகள் காப்பகம்: சுற்றுலாவுக்கு அனுமதி

ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 6 மாதங்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்ஸ்லிப் உள்ளிட்ட வனச்சரக பகுதிகள் உள்ளன. இவற்றில், தங்கும் விடுதிகள், கவியருவி, நீர் வீழ்ச்சிகள், சின்னக்கல்லார் உள்பட பல சுற்றுலா பகுதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக புலிகள் காப்பகத்தில் சுற்றுலாவுக்கு கடந்த, 6 மாதமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா தளர்வுகள் காரணமாக அரசு உத்தரவுப்படி இன்று, (செப்.,2) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் புலிகள் காப்பகப் பகுதிகளுக்கு வந்து சென்றனர். சுற்றுலாப்பயணிகள் புலிகள் காப்பகத்தின், https://www.atrpollachi.com என்ற இணையதளத்தில் தங்கும் விடுதிகளில் தங்க, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X