சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: உதவி பொறியாளர் கைது

Added : செப் 02, 2021
Share
Advertisement
போடி: தேனி மாவட்டம் போடி நகர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக சுருளியப்பன் பணிபுரிந்து வருகிறார். அவரை அணுகிய முன்னாள் ராணுவ வீரர் மகேந்திரன், தனது வீட்டில் உள்ள மின் வயரை மாற்றி அமைக்க மனு அளித்தார். அதற்கு, சுருளியப்பன் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை விரும்பாத மகேந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி மகேந்திரன், ரூ.5 ஆயிரம்

போடி: தேனி மாவட்டம் போடி நகர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக சுருளியப்பன் பணிபுரிந்து வருகிறார். அவரை அணுகிய முன்னாள் ராணுவ வீரர் மகேந்திரன், தனது வீட்டில் உள்ள மின் வயரை மாற்றி அமைக்க மனு அளித்தார். அதற்கு, சுருளியப்பன் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை விரும்பாத மகேந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி மகேந்திரன், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த தேனி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கருப்பையா, சுருளியப்பனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X