பொது செய்தி

இந்தியா

உலக தரவரிசை: முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைகள் இல்லை

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: உலகளவில் தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 300 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரு பல்கலைக் கழகம் கூட இடம்பெறவில்லை.உலகளவில் தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசை - 2022 என்ற பட்டியலை, டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்கள் (டிஎச்ஈ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. பல்கலைகளின் தரத்தை வைத்து இந்த தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இந்தப்

புதுடில்லி: உலகளவில் தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 300 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரு பல்கலைக் கழகம் கூட இடம்பெறவில்லை.



latest tamil news



உலகளவில் தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசை - 2022 என்ற பட்டியலை, டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்கள் (டிஎச்ஈ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. பல்கலைகளின் தரத்தை வைத்து இந்த தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இந்தப் பட்டியலில், உலகளவிலான முதல் இடத்தை 6வது ஆண்டாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தக்கவைத்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் சமீபத்தில், உலகளவில் கோவிட் தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



இந்தப் பட்டியலில் முதல் 300 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பிடிக்கவில்லை. இந்தியாவில் முதன்மையான பல்கலைக் கழகமாகவுள்ள, ஐஐஎஸ்சி பெங்களூரு மற்றும் ஐஐடி ரோபர் ஆகிய இரண்டும் 301 - 350 ஆகிய இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. 401- 450க்குள் ஐஐடி இந்தூர், 501 - 600 அழகப்பா பல்கலை, 601 - 800 ஐஐடி ஐதராபாத் மற்றும் 800 - 1,000 புதிய மூன்று இந்திய பல்கலைகள் இடம்பிடித்துள்ளன.

இந்திய பல்கலைக்கழகங்கள் எதுவும் முதல் 300 இடங்களில் வரவில்லை என்றாலும், மொத்தமாக இந்தப் பட்டியலில் உள்ள இந்திய பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியப் பல்கலைக்கழகம் 2019ம் ஆண்டு வரை 300 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-செப்-202123:58:11 IST Report Abuse
Pugazh V இட ஒதுக்கீடு இவ்லாத தனியார் பல்கலைக்கழக ங்களில் ஒன்று கூட ஏன் இடம்பெறவில்லை? சார் இங்கே வாங்க... பதில் சொல்லுங்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-செப்-202123:56:49 IST Report Abuse
Pugazh V ஐ.ஐ.டி. பற்றி ஒருத்தர் எழுதியுள்ளார். சார்.. ஐ.ஐ.டி., ஐ.ஐ. எம். , என்.ஐ.டி. எல்லாம் ஒன்றிய அரசின் கீழ் தான் இயங்குகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக ராமர் கோவில், சமஸ்கிருத ம், கோமியம் என்று உருட்டி கொண்டிருந்த பாஜக வினரால் தான் தரம் தாழ்ந்து விட்டன.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-செப்-202123:53:50 IST Report Abuse
Pugazh V இட ஒதுக்கீடு என்று எழுதும் மூடர்களுக்கான சரியான கேள்வி : "தனியார் பலகலையில் இட ஒதுக்கீடு இருக்கிறதா.?". சென்னை Rajas - பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X