சென்னை: பொதுச் சொத்துகளை விற்பனை செய்வதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு நல்லதல்ல என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள அனைவருடைய சொத்து. பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு, குறு தொழிலுக்கும் ஆணிவேராக இருப்பது பொதுத்துறை நிறுவனங்கள்தான். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. இம்முடிவைத் தமிழகம் கடுமையாக எதிர்க்கும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் முடிவைக் கைவிடக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதவுள்ளேன். லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பொதுச் சொத்துகளை விற்பனை செய்வதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
மணிமண்டபம்
மேலும், சட்டசபை விதிஎண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‛கடந்த 1987-ம் ஆண்டு நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிசூட்டில் பலியான 21 பேரின் நினைவாக, விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும்,' என அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE