பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலை: மா.சுப்பிரமணியன்

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: ‛‛சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்,'' என சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.இது தொடர்பாக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு அவர் பேசியதாவது: தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளான சித்த மருத்துவத்தை போற்றும் வகையில் தனிப்பல்கலைகழகம் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக
சென்னை, சித்தமருத்துவம், பல்கலை, பல்கலைகழகம், மா.சுப்பிரமணியன்

சென்னை: ‛‛சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்,'' என சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இது தொடர்பாக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு அவர் பேசியதாவது: தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளான சித்த மருத்துவத்தை போற்றும் வகையில் தனிப்பல்கலைகழகம் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் அமைக்கப்படும். சித்த பல்கலையில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் யோகாவும் இடம்பெறும். தமிழகத்தில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப்பிரிவுகள் ரூ.266.73 கோடியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இந்தியாவில் முதல் முறையாக, சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் சட்டசபையில் அறிவித்தார். இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் யோகாசனமும் இந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெறும். தமிழகத்தில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகள் ரூ.266 கோடியில் அமைக்கப்படும். 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த 69 கோடியில் கூடுதலாக 188 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும். கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 2,400 நர்சுகள் நியமிக்கப்படுவர் உள்ளிட்ட பல அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட்டார்
முக்கிய அறிவிப்புகள்

சட்டசபையில் சுகாதாரத்துறை சார்பில், வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:
* மக்களை தேடி மருத்துவம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
*25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும்.
*கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும்.
*சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும்.
*‛சற்றே குறைப்போம்' திட்டத்தின் கீழ் சர்க்கரை உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
*டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அறிய ரூ.4 கோடியில் சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்படும்.


நீட் தேர்வை புறந்தள்ள சட்டம்

முன்னதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மருத்துவ கல்வி சேர்க்கையின் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை புறந்தள்ள புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என தலைமை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு தெரிவித்து உள்ளது. இதற்காக புதிய சட்டம் இயற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
03-செப்-202107:30:49 IST Report Abuse
Nagar அல்லோபதி மருத்துவத்தை முழுவதும் தடை செய்து - அல்லோபதி மருத்துவ கல்லூரிகளை மூடுங்கள். எந்த ஒரு வியாதிக்கும ஒரு தீர்வு - உன்ன நோன்பு இருப்பது மட்டும் தான். சளி தலைவலி யில் இருந்து கான்செர் ஹார்ட் அட்டாக் வரை உன்ன நோன்பு இருந்து குணமாக முடியும். வெறும் சூடு தண்ணி குடித்து மூன்று அல்லது நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் எந்த வியாதியும் குணமாகும் .
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
03-செப்-202105:11:31 IST Report Abuse
Siva Kumar சித்த மருத்துவமனையை பல்கலையாக மாற்றி கொள்ளை அடிக்க போகிறார்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-செப்-202123:46:50 IST Report Abuse
Pugazh V திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி சிறப்பு. டாக்டர் கலைஞர் தமிழக த்தில் உட்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலம்பெறும் திட்டங்களைத் தொலைநோக்குச் சாந்தையுடன் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றினார். அவர் வழியில் முதல்வர் மு.க. ஸ்டாலின். வாழ்க. பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X