பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரில் விநாயகர் சிலையுடன் இந்து முன்னணி ஊர்வலம்

Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலுார்: விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், விநாயகரே செல்லியம்மனிடம் தடையை நீக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டுமென வேலூரில் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர் பொது இடத்தில் விநாயகரை வைத்து வழிபட்டனர்.வேலூரில் செல்லியம்மன் ஆலயம் அருகில் இந்து முன்னணி இயக்கம் சார்பில், தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில்
வேலூரில் விநாயகர் சிலையுடன் இந்து முன்னணி ஊர்வலம்

வேலுார்: விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், விநாயகரே செல்லியம்மனிடம் தடையை நீக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டுமென வேலூரில் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர் பொது இடத்தில் விநாயகரை வைத்து வழிபட்டனர்.
வேலூரில் செல்லியம்மன் ஆலயம் அருகில் இந்து முன்னணி இயக்கம் சார்பில், தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்ததைக் கண்டித்தும், அரசுக்கு நல்ல புத்தியை இறைவன் அளிக்க வேண்டுமென விநாயகர் சிலையுடன் செல்லியம்மன் ஆலயம் அருகில் பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதன்பின் இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பொறுப்பாளர்கள் பாஸ்கர், ஆதிமோகன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
பின்னர், விநாயகர் சிலையுடன் செல்லியம்மன் ஆலயத்தினுள் சென்று அரசுக்கு நல்ல புத்தி தர கோரி சிறப்பு வழிபாடும் செய்தனர். இதில், திரளானோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202120:19:23 IST Report Abuse
பேசும் தமிழன் கண்டிப்பாக விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை.... ரம். மற்றும் மேரி மாதா ஊர்வலத்துக்கு மட்டும் தான் இந்த அரசு அனுமதி அளிக்கும்.... விடியல் வந்து விட்டது... ஓட்டு போட்ட மக்கள் அனுபவியுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X