பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சான்று இருந்தால் மது: நீலகிரி மாவட்ட நிர்வாகம் கறார்!

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஊட்டி: நீலகிரியில், ‛‛மது பிரியர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தால் மட்டும் மது வகைகள் வழங்கப்படும்,'' என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், ஊரடங்கு தளர்வு காரணமாக தோட்டக்கலை மற்றும் வனத் துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும்
கொரோனா, சான்று, மதுவகைகள், நீலகிரி, கலெக்டர்,

ஊட்டி: நீலகிரியில், ‛‛மது பிரியர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தால் மட்டும் மது வகைகள் வழங்கப்படும்,'' என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில், ஊரடங்கு தளர்வு காரணமாக தோட்டக்கலை மற்றும் வனத் துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் சுகாதாரத் துறையினர் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை, 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தாலும் பிற இடங்களிலிருந்து வரும் நபர்களால் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


latest tamil news



அதன்படி, மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கவரும் மதுப்பிரியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தால் மட்டுமே மது வகைகள் வழங்கப்படும். என உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் கூறுகையில், "நீலகிரியில், 75 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, மது வகைகளை வாங்க வரும் மதுப்பிரியர்கள் கண்டிப்பாக முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அதற்கான குறுஞ்செய்தியை காட்டிவிட்டு மது வகைகளை வாங்கிச் செல்லலாம்," என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
02-செப்-202122:26:13 IST Report Abuse
J. G. Muthuraj முதலாவது, மது குடிப்பவர் இல்லை என்ற சான்றிதழ் பெற்று வர சொல்லுங்கள்.....அப்பத்தான் கொரோன தடுப்பூசி போடப்படும்.....இதன்மூலம் குடிப்பழக்கத்தை ஒழிக்கலாமே.....
Rate this:
Cancel
02-செப்-202120:05:30 IST Report Abuse
அப்புசாமி குடுக்கறது அரசு விஷம். இதுல கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டு குடிக்கணுமாக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X