பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக - ஆந்திரா மாநில எல்லையில் யானைகள் மோதல்: மக்கள் அச்சம்

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வேலுார்: தமிழக - ஆந்திரா மாநில எல்லையில், வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே யானைகள் மோதிக் கொள்வதால் வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் கிராமமக்கள் துாக்கத்தை இழந்து அச்சத்தில் தவிக்கின்றனர்.கர்நாடகா மாநிலம், தீர்த்தம் வனப்பகுதியில் இருந்து வேப்பணஹள்ளி வழியாக 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக ஆந்திரா மாநிலம் திருப்பதிக்குச் செல்கிறது. இந்த யானைகள் ஆந்திரா
ANDHRA, TAMILNADU, BORDER, ELEPHANT, FIGHT, ஆந்திரா, தமிழ்நாடு, எல்லை, யானைகள், மோதல்

வேலுார்: தமிழக - ஆந்திரா மாநில எல்லையில், வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே யானைகள் மோதிக் கொள்வதால் வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் கிராமமக்கள் துாக்கத்தை இழந்து அச்சத்தில் தவிக்கின்றனர்.

கர்நாடகா மாநிலம், தீர்த்தம் வனப்பகுதியில் இருந்து வேப்பணஹள்ளி வழியாக 50க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக ஆந்திரா மாநிலம் திருப்பதிக்குச் செல்கிறது. இந்த யானைகள் ஆந்திரா மாநிலம், குப்பம், வி.கோட்டா வழியாக வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு, சைன குண்டா, குடியாத்தம், கொட்டார மடகு, மோர்த்தானா, லத்தேரி, பனமடங்கி வழியாக மீண்டும் ஆந்திரா மாநிலம் பரதராமி, சித்துார் சென்று திருப்பதி வனப்பகுதிக்கு போய் சேருகிறது.யானைகள் போகும் போது வனப்பகுதியையொட்டி உள்ள நிலங்களை நாசம் செய்தபடி செல்கிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1:00 மணிக்கு பேர்ணாம்பட்டு அருகே சைன குண்டா வனப்பகுதியில் யானைகள் பிளிரும் சத்தம் பயங்கரமாக கேட்டுள்ளது. விவசாயிகள் சிலர் அருகில் சென்று பார்த்த போது, யானைகளுக்குள் மோதல் நடப்பதும், இதற்காக ஆவேசமாக யானைகள் ஓடுவதும் தெரிந்தது. இதை பார்த்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

இது குறித்து ஆந்திரா மாநிலம், சித்துார் வனத்துறையினர் கூறியதாவது: கர்நாடகா மாநிலம், தீர்த்தம் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் ஆந்திரா மாநிலம், திருப்பதிக்குச் செல்கிறது. அதே போல, ஆந்திரா மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் இருந்து மற்றொரு யானைகள் கூட்டம் கர்நாடகா மாநிலம், மைசூருக்குச் செல்கிறது.

இந்த யானைகள் வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு, கொட்டார மடகு, சைன குண்டா, குடியாத்தம் வனப்பகுதியில் நேருக்கு நேராக சந்திக்கின்றது. அப்போது, உணவு, தண்ணீருக்காகவும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும். யானைகள் சண்டையிட்டால் அது பல நாட்கள் நடக்கும். சண்டையை நிறுத்த முடியாது. சண்டையிட்டுக் கொண்டே ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு படு வேகமாக ஓடும்.


latest tamil news


யானைகள் சோர்வடையும் போதும், மழை பெய்தாலும் சண்டையை நிறுத்திக் கொள்ளும். யானைகள் சண்டையிடும் போது விளை நிலங்கள் நாசமாகும். கால்நடைகள், மனிதர்களை மிதித்தே கொன்று விடும். எனவே, இப்பகுதியில் வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பகலில் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யானைகள் சண்டையை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். ஊருக்குள் யானைகள் வந்தால் பொது மக்கள் உதவியோடு விரட்டியடிக்கின்றோம். வனப்பகுதியிலும் முடிந்த வரை யானைகளை விரட்டி வருகிறோம். அப்போது, பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பட்டாசுகள் வெடித்தும், டார்ச் லைட் காட்டி சிக்னல் கொடுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

யானைகள் மோதலால் வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டில் இருந்து பனமடங்கி வரை தமிழக - ஆந்திரா மாநில எல்லையில் வசிப்பவர்கள் துாக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
02-செப்-202118:39:00 IST Report Abuse
B. இராமச்சந்திரன் மாநில எல்லை தகறாரா இருக்குமோ...
Rate this:
Cancel
02-செப்-202118:38:40 IST Report Abuse
அப்புசாமி நெனைச்சேன். மொழிவாரி மாநிலங்களாகப் பிரிச்சால் ஒண்ணுக்கொண்ணு மோதிக்கொள்ளும். இப்போ தமிழ் யானைகள் தெலுங்கு யானைகளோட மோதல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X