9 கோடி ரூபாயை உதறிவிட்டு காதலனை மணக்க உள்ள ஜப்பான் இளவரசி!| Dinamalar

9 கோடி ரூபாயை உதறிவிட்டு காதலனை மணக்க உள்ள ஜப்பான் இளவரசி!

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (8)
Share
டோக்கியோ: ஜப்பான் பேரரசர் நரிஷ்டோவின் தம்பி மகளும், இளவரசர் புமிஷ்டோவின் மூத்த மகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சேராத தனது காதலனை இந்தாண்டு இறுதியில் மணக்க உள்ளார். அரச குடும்ப அடையாளத்தை இழக்க உள்ளதால் செலுத்தப்படும் இழப்பீடுத் தொகை ரூ.8.7 கோடியை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.தற்போது 29 வயதாகும் இளவரசி மகோவும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கொமுரோவும் 2012-ல்
ஜப்பான், இளவரசி, திருமணம்,

டோக்கியோ: ஜப்பான் பேரரசர் நரிஷ்டோவின் தம்பி மகளும், இளவரசர் புமிஷ்டோவின் மூத்த மகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சேராத தனது காதலனை இந்தாண்டு இறுதியில் மணக்க உள்ளார். அரச குடும்ப அடையாளத்தை இழக்க உள்ளதால் செலுத்தப்படும் இழப்பீடுத் தொகை ரூ.8.7 கோடியை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

தற்போது 29 வயதாகும் இளவரசி மகோவும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கொமுரோவும் 2012-ல் டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக சந்தித்துக் கொண்டனர். அந்த அறிமுகம் நட்பாகி காதலாக மாறியது. 2017-ல் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்துகொண்டனர். 2018-ல் முறைப்படி திருமணம் செய்ய முடிவு எடுத்திருந்தனர். அச்சமயத்தில் கொமுரோவின் தாயார், தனது காதலனிடம் 26 லட்சத்தை மகன் கல்விக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு கடனாக பெற்று திரும்பிச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் காதல் ஜோடி தங்கள் திருமணத்தை ஒத்தி வைத்தது.

தற்போது இளவரசியின் காதலர் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து, அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதியுள்ளார். அதன் முடிவுகள் டிசம்பருக்குள் வர உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இளவரசி மகோவும் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் அவர்களது திருமணத்தை பாரம்பரிய சடங்குகளின்றி நடத்த திட்டமிட்டுள்ளனர்.


latest tamil newsஜப்பான் அரசு குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால் அரச பட்டத்தை இழக்க நேரிடும். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றால் அதற்காக இழப்பீடு வழங்கப்படும். மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் இழப்பீடான ரூ.8.7 கோடி தனக்கு தேவையில்லை என இளவரசி மகோ மறுத்துவிட்டார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X