பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நேரம் நீட்டிப்பு:தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குபதிவிற்கான நேரத்தை ஒன்றரை மணி நேரம் கூடுதலாக நீட்டிப்பு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்

சென்னை: உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குபதிவிற்கான நேரத்தை ஒன்றரை மணி நேரம் கூடுதலாக நீட்டிப்பு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த போதிலும் முறையான அறிவிப்புகள் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வாக்கு பதிவு நடைபெறும். தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கூடுதலாக ஒன்றரை மணி நேரமாக அதாவது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் வாக்குபதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளது.



latest tamil news




உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அரசு தரப்பில் இருந்து முறையாக அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் வாக்கு பதிவுக்கான நேர நீட்டிப்பு குறித்த தகவலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
03-செப்-202109:53:40 IST Report Abuse
duruvasar இப்போ உடன்பிறப்புக்களுக்கு கன்டைனர் லாரி பின்னாடி ஓடவேண்டிய அவசியம் இல்லை. பொட்டிய தூக்கிக்கொண்டு ஓட வேண்டிய அவசியமும் இருக்காது ஏனென்றால் எந்த பட்டனை அழுத்தினாலும் ஆளும் கட்சி கூட்டணி சின்னத்தில் பதிவு செய்யும் ஃபார்முலாஆவை செட் செய்துவிடலாம். அதற்க்கு தான் கூடுதல் நேரம்.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
02-செப்-202120:11:25 IST Report Abuse
R.Kumaresan தமிழ்நாட்டில் உள்ளாட்சித்தேர்தலே சரியாக நடக்கவில்லை இந்த உள்ளாட்சித்தேர்தலே நடந்தாலென்ன இல்லாவிட்டிலேன்ன.R.Kumaresan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X