விதிமுறை மீறாத வாகன உரிமையாளர்கள்அப்புறப்படுத்தும் போலீஸ் மீது அதிருப்தி

Added : செப் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு:போக்குவரத்து விதிமுறை மீறாத உரிமையாளர்களின் வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்துவது அதிகரிப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன், விதிமுறை மீறி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்ததாக வாகனம் ஒன்றை அப்புறப்படுத்திய போக்குவரத்து போலீசாருக்கும், வாகன ஓட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, மாநகராட்சி போலீஸ் கமிஷனர்

பெங்களூரு:போக்குவரத்து விதிமுறை மீறாத உரிமையாளர்களின் வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்துவது அதிகரிப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், விதிமுறை மீறி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்ததாக வாகனம் ஒன்றை அப்புறப்படுத்திய போக்குவரத்து போலீசாருக்கும், வாகன ஓட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, மாநகராட்சி போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்ட அறிவிப்பில், 'விதிமுறை மீறுவதை புகைப்படம் எடுத்து ஆதாரமாக வைத்து கொண்ட பின் தான், வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், பல பகுதிகளில் விதிமுறைகளை மீறாமல் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும் போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்துவதாக ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர்.இது போன்று நடப்பதாக பல பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி ஒருவர் கூறியதாவது:இந்திரா நகர் பிரதான ரோட்டில், வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று வருவதற்குள் வாகனத்தை காணவில்லை. அருகிலுள்ள போக்குவரத்து சிக்னலில் விசாரித்த போது, விதிமுறை மீறி நிறுத்தப்பட்டு இருந்ததால் வாகனம் அப்புறப்படுத்தப்பட்டு, போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.ஆனால், வாகனம் எந்த விதிமுறையும் மீறி நிறுத்தப்படவில்லை; போக்குவரத்து நெரிசலும் ஏற்படவில்லை. இதை விளக்கியும் போலீசார், வாகனத்தை எடுக்க அனுமதிக்கவில்லை.

புகைப்பட ஆதாரம் கேட்ட போதும் வழங்கவில்லை. வேறு வழியின்றி அபராத தொகை செலுத்தினேன். அதற்கான ரசீதும் வழங்கவில்லை. எந்த வித ஆதாரமும் இல்லாமல் போலீசார் செயல்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து இது போல், கமர்ஷியல் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் வாகனங்களை முறையாக நிறுத்தி விட்டு சென்றோரும் அபராதம் செலுத்தியதாக போக்குவரத்து போலீஸ் துறையின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். போலீசாரின் இந்த செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X