பொது செய்தி

இந்தியா

சுய மருத்துவம் தவிர்க்க அறிவுரை

Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் இறப்பவர்களில் இளம் வயதினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தென்மாநில சுகாதாரத்துறை அறிக்கை படி, ஆகஸ்ட் 16 முதல் 22 வரையிலான நிலவரபடி, கொரோனா இறப்பு விகிதம் கேரளாவில் 893; தமிழகத்தில் 190; கர்நாடகாவில் 166 ஆக உள்ளது.மூன்று மாநிலங்களிலும் பெரும்பான்மையான இறப்பு சதவீதம் 30 - 50 வயதுக்கு உட்பட்டோராக உள்ளனர்.

பெங்களூரு:கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் இறப்பவர்களில் இளம் வயதினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்மாநில சுகாதாரத்துறை அறிக்கை படி, ஆகஸ்ட் 16 முதல் 22 வரையிலான நிலவரபடி, கொரோனா இறப்பு விகிதம் கேரளாவில் 893; தமிழகத்தில் 190; கர்நாடகாவில் 166 ஆக உள்ளது.மூன்று மாநிலங்களிலும் பெரும்பான்மையான இறப்பு சதவீதம் 30 - 50 வயதுக்கு உட்பட்டோராக உள்ளனர். கர்நாடகாவில் இறப்பு எண்ணிக்கையில் நான்கில் ஒருவர் 30 - 40 வயதுக்கு உட்பட்டோராக உள்ளனர்.

மேலும் சிறுவர்களின் இறப்பு விகிதம் கர்நாடகாவில் இல்லை. இளம் வயதினர் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மருத்துவர்கள் கூறியதாவது:வயதானோரின் இறப்பை விட இளம் வயதினர் எண்ணிக்கை சதவீதம் அதிகரித்துள்ளது. நோய் அறிகுறிகள் காணப்பட்டதும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவதும், பரிசோதனை செய்து கொள்வதும் முக்கியம்.வீட்டில் சுய மருத்துவம் செய்து, இறுதி நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதால் தான் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இளம் வயதினர் அலட்சியமாக இருப்பதால் தான் இறப்புகளும் அதிகமாக உள்ளது. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குழந்தைகளையும், முதியவர்களையும் பாதுகாப்பாக கவனிப்பது போல், இளம் வயதில் உள்ளவர்கள் தங்களின் உடல்நலத்தையும் கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
03-செப்-202111:47:06 IST Report Abuse
Darmavan தெளிவாக சொல்லாமல் இப்படி பொதுப்படையாக பேசுவதில் பயனில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X