பொது செய்தி

இந்தியா

முதியோர் இல்லங்கள் என்ற பெயரில் மோசடிஅதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் கவலை

Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு:''நாட்டில் தன்னார்வ தொண்டு அமைப்புகள், முதியோர் ஆசிரமம், போதைப்பழக்கத்திலிருந்து மீட்கும் மையம் என்ற பெயரில் மோசடி செய்வது மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி கூறியதாவது:நாட்டில் தன்னார்வ தொண்டு அமைப்புகள், முதியோர் இல்லங்கள், போதை பழக்க மீட்பு மையங்கள் மத்திய

பெங்களூரு:''நாட்டில் தன்னார்வ தொண்டு அமைப்புகள், முதியோர் ஆசிரமம், போதைப்பழக்கத்திலிருந்து மீட்கும் மையம் என்ற பெயரில் மோசடி செய்வது மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி கூறியதாவது:நாட்டில் தன்னார்வ தொண்டு அமைப்புகள், முதியோர் இல்லங்கள், போதை பழக்க மீட்பு மையங்கள் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெறுகின்றன.ஆனால் அந்த பணத்தை முறைகேடாக செலவழிக்கின்றனர்; மையங்களின் அடிப்படை வசதிகளை கூட செய்வதில்லை. இத்தகைய மையங்களுக்கு, 24 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.

பெரும்பாலான ஆசிரமங்கள், மையங்கள் மத்திய அரசிடம் நிதி பெறுவது பற்றிய தகவலை, பகிரங்கப்படுத்துவதில்லை. சில தன்னார்வ அமைப்புகள், நிதியுதவியை தவறாக பயன்படுத்துவது, மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.சில முதியோர் இல்லங்கள், போதை மீட்பு மையத்தை முறையாக நடத்தவில்லை என்றாலும், மத்திய அரசிடம் நிதியுதவி பெறுகின்றன.முதியோர் இல்லங்களின் பெயரில், பொய்யான ஆவணங்கள் கொடுத்து, பணம் பெறும் தன்னார்வ தொண்டு அமைப்புகளை கட்டுப்படுத்த, மத்திய அரசு முந்தைய மாதம், ஒரு வலைதளத்தை துவங்கியுள்ளது.

அதில் பதிவு செய்து கொள்ளும் அமைப்புகள், கட்டாயமாக வலைதளம் மூலம் விண்ணப்பம் தாக்கல் செய்து, ஆவணங்களை கொடுக்க வேண்டும். இதனால் எத்தனை அமைப்புகள் செயல்படுகின்றன என்ற தகவல் அரசுக்கு கிடைக்கும்.முதியோர் இல்லங்களுக்கு வருவோர், செல்வோரின் முக அடையாளம் வலைதளத்தில் பதிவாகும். இதன் அடிப்படையில், நிதியுதவி வழங்கப்படும்.நாட்டில் போதைப்பொருள் பிரச்னை அதிகமாக உள்ளது.

ஆசிரமங்கள், மறுவாழ்வு மையங்களில், தேவையான வசதியை செய்து கொடுக்காவிட்டால், அதன் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் பெருமளவில் வருகிறது. இதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202120:19:54 IST Report Abuse
அப்புசாமி பொதுவாகவே இந்தியர்கள்னாலே ஏமாத்துறவங்க என்னும் அபிபிராயம் பரவி வருகிறது. குழந்தை பிறந்தது முதல் சுடுகாடு வரைக்கும் ஊழல், ஏமாத்து, பொய்,, பித்தலாட்டம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X