வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 8 பி.டி.ஓ., 27 துணை பி.டி.ஓ., க்கள் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 8 பி.டி.ஓ., 27 துணை பி.டி.ஓ., க்கள் மாற்றம்

Added : செப் 02, 2021
Share
வேலுார்:வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், 8 பி.டி.ஓ., 27 துணை பி.டி.ஓ., க்கள் மாற்றப்பட்டனர்.வேலுார் மாவட்டத்தில், வேலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் குடியாத்தத்திற்கும், அங்கு பணியாற்றிய மணிமொழி வேலுார் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்திற்கும், கணியம்பாடி தயாளன் அதே ஒன்றியத்தில் வளர்ச்சி பிரிவிற்கும், அங்கு

வேலுார்:வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், 8 பி.டி.ஓ., 27 துணை பி.டி.ஓ., க்கள் மாற்றப்பட்டனர்.

வேலுார் மாவட்டத்தில், வேலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் குடியாத்தத்திற்கும், அங்கு பணியாற்றிய மணிமொழி வேலுார் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்திற்கும், கணியம்பாடி தயாளன் அதே ஒன்றியத்தில் வளர்ச்சி பிரிவிற்கும், அங்கு பணியாற்றிய ராஜலட்சுமி அதே ஒன்றியத்தில் கிராம வளர்ச்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பிறப்பித்தார்.

அதே போல, ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி காவேரிப்பாக்கத்திற்கும், அங்கு பணியாற்றிய ரவி சோளிங்கருக்கும், இங்கு பணியாற்றிய தனசேகரன் காவேரிப்பாக்கத்திற்கும், இங்கு பணியாற்றிய குமார் அரக்கோணத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இது தவிர இந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்த 27 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று பிறப்பித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவர்கள் மாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X